»   »  தமிழைத் தொடர்ந்து பிற மொழிகளிலும் பாய்கிறது அதர்வா முரளியின் ஈட்டி

தமிழைத் தொடர்ந்து பிற மொழிகளிலும் பாய்கிறது அதர்வா முரளியின் ஈட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வரம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ஈட்டி திரைப்படம் தற்போது இந்தி, தெலுங்கு , கன்னடம் என்று பல்வேறு மொழிகளிலும் ரீமேக்காக உள்ளது.

அதர்வா முரளி - ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஈட்டி திரைப்படம் மழை, வெள்ளத்திலும் பாதிப்பில்லாமல் வெற்றி பெற்றது.


Eetti Remake in Multi Languages

வெளியான முதல் 4 நாட்களிலேயே 4 கோடிகளுக்கும் அதிகமாக இப்படம் வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்திட மற்ற மொழி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இந்தியில் ஷாகித் கபூர், தெலுங்கில் நிதின் மற்றும் கன்னடத்தில் யஷ் ஆகியோர் இப்பட ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


தமிழில் தயாரித்த மைக்கேல் எஸ்.ராயப்பன் ஈட்டியின் தெலுங்கு, கன்னட மற்றும் இந்திப் பதிப்பை தயாரிக்கிறார். அதே போல ஈட்டியின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு பிற மொழிகளிலும் இப்படத்தை இயக்குகிறார்.

English summary
Atharvaa Murali's Eetti Now Remade in Hindi, Telugu And Kannada Languages. The Official Announcement will be Released Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil