»   »  டான்ஸ் என்ற பெயரில் செக்ஸ் ஆட்டம் போட்டிருக்கிறார் நடிகை: டான்ஸ் மாஸ்டர் கவலை

டான்ஸ் என்ற பெயரில் செக்ஸ் ஆட்டம் போட்டிருக்கிறார் நடிகை: டான்ஸ் மாஸ்டர் கவலை

Posted By:
Subscribe to Oneindia Tamil
டான்ஸ் என்ற பெயரில் செக்ஸ் ஆட்டம் போட்ட நடிகை- வீடியோ

மும்பை: டான்ஸ் என்ற பெயரில் செக்ஸ் ஆட்டம் ஆடியிருக்கிறார் ஜாக்குலின் பெர்ணான்டஸ் என்று டான்ஸ் மாஸ்டர் சரோஜ் வருத்தப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் அருமையாக நடனம் ஆடுவார். அவர் நடனமாடிய ஏக் தோ தீன் பாடல்(தேசாப் படம்) பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. டைகர் ஷ்ராப் நடித்து வரும் பாகி 2 படத்தில் ஏக் தோ தீன் பாடலை ரீமேக் செய்துள்ளனர்.

அந்த பாடலுக்கு ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடனம் ஆடியுள்ளார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

ஜாக்குலின் ஆடிய வீடியோவை பார்த்த பலரும் மாதுரி பக்கத்தில் கூட அவரால் வர முடியாது என்று தெரிவித்துள்ளனர். ஜாக்குலின் மாதுரியின் கருத்தை கேட்க அவருக்கு பல முறை போன் செய்தும் கண்டுகொள்ளவில்லையாம்.

ஆலியா பட்

ஆலியா பட்

பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தில் மாதுரியின் தம்மா தம்மா பாடல் ரீமேக் செய்யப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த மாதுரி மகிழ்ச்சி அடைந்து ஆலியா, வருணை நேரில் பார்த்து வாழ்த்தினார். ஆனால் ஜாக்குலினை கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் அவருக்கு ஏக் தோ தீன் ரீமேக் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

டான்ஸ் மாஸ்டர்

டான்ஸ் மாஸ்டர்

ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் தன்னை சந்தித்த டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான் தன்னிடம் வந்து ஏக் தோ தீன் பாடலை ரீமேக் செய்வது பற்றி கூறி வருத்தப்பட்டதாக தேசாப் பட இயக்குனர் சந்திரா தெரிவித்துள்ளார்.

செக்ஸ் ஆட்டம்

செக்ஸ் ஆட்டம்

ஏக் தோ தீன் பாடலுக்கு மாதுரி அவ்வளவு அழகாக ஆடினார். ஆனால் அதன் ரீமேக்கை பார்த்தால் டான்ஸ் மாதிரி தெரியவில்லை செக்ஸ் ஆட்டம் போல் உள்ளது என்று கூறி சரோஜ் வருத்தப்பட்டாராம்.

English summary
Tezaab director N. Chandra told that dance master Saroj Khan told him that she can't believe they've done this to Ek Do Teen. It's crass - beyond imagination. Madhuri Dixit danced with such grace and innocence. This number is like a sex act!".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X