»   »  வருகிறது காமசூத்ரா வெப்சீரிஸ்: ஏக்தாவை வாழ்த்தும் இளசுகள்

வருகிறது காமசூத்ரா வெப்சீரிஸ்: ஏக்தாவை வாழ்த்தும் இளசுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பாலிவுட்டில் காமசூத்ரா வெப்செரிஸ் விரைவில்- வீடியோ

சென்னை: காமசூத்ராவை அடிப்படையாக வைத்து வெப் சீரிஸை தயாரிக்க உள்ளாராம் ஏக்தா கபூர்.

பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் மகள் ஏக்தா கபூர் தொலைக்காட்சி தொடர்கள், படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

Ekta Kapoor to produce a webseries on Kamasutra

உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுத்த காமசூத்ராவை அடிப்படையாக வைத்து வெப் சீரிஸ் எடுக்க முடிவு செய்துள்ளாராம் ஏக்தா. இந்த வெப் சீரிஸை இயக்க சரியான ஆளை தேடிக் கொண்டிருக்கிறாராம்.

ஏக்தாவின் திட்டம் குறித்து அறிந்த இளசுகள் அம்மா, தாயே நீ நல்லா இருக்கணும் என்று வாழ்த்துகிறார்கள். தமிழ் ரசிகர்களை கவர்ந்த நாகினி தொடரை தயாரித்து வருபவர் ஏக்தா.

3வது சீசனில் மவுனி ராய்க்கு பதிலாக கரிஷ்மா தன்னா நாகினியாக நடிக்க உள்ளார். கரிஷ்மாவை தமிழக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Ekta Kapoor has reportedly decided to produce a web series on Kamasutra. She is seraching for a suitable person who can direct this webseries effectively.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X