கேரளாவில் சிகிச்சை முடிந்த நிலையில், ஹைதராபாத்துக்கு லத்தி சூட்டிங்கிற்காக பறந்த விஷால்!
சென்னை: இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் லத்தி படத்தின் சூட்டிங்கின் கிளைமேக்ஸ் காட்சியின் போது கீழே விழுந்ததில் நடிகர் விஷாலுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனை குணமாக்க கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மீண்டும் லத்தி படப்பிடிப்பில் கலந்து கொண்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகர் விஷால்.
சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடவா எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், இந்த படம் விஷாலுக்கு ஒரு நல்ல கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிச்சா போலீஸ் தான்
போலீஸ், மிலிட்ரி, போலீஸ் ஆக வேண்டும் இப்படியே பல படங்களில் நடித்து வருகிறார் விஷால் என்கிற விமர்சனம் பெரிய அளவில் எழுந்து வந்தாலும், அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் தனக்கு எது பிடிக்கிறதோ அதை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் விஷால். எனிமி படத்தில் போலீஸ் ஆக ஆசைப்படும் சிறுவனாக நடித்த விஷால், சமீபத்தில் வெளியான வீரமே வாகை சூடவா படத்திலும் போலீஸ் ஆக நினைத்து கிளைமேக்ஸில் போலீஸ் ஆகி விடுகிறார்.

சரியாக ஓடுவதில்லை
நடிகர் விஷாலுக்கு கடைசியாக இரும்புத்திரை படம் நன்றாக ஓடி ஹிட் கொடுத்தது. அந்த படத்திற்கு பிறகு ஏகப்பட்ட படங்களில் அதே போலவே நடித்து பார்த்தும் எந்தவொரு படமும் நடிகர் விஷாலுக்கு கை கொடுக்கவில்லை. சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடவா என அனைத்து படங்களும் சுமார் ரகமாகவே மாறி உள்ளன.

விபத்தில் சிக்கிய விஷால்
ஆனாலும், எப்படியாவது மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தே தீருவேன் என்கிற வெறியோடு விஷால் லத்தி படத்தில் கடுமையாக உழைத்து வருகிறார். இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அந்த படத்தில் பீட்டர் ஹெயின் மாஸ்டர் ஸ்டண்ட் இயக்குநராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியில் குழந்தையுடன் மாடியிலிருந்து விஷால் குதிக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் விஷாலுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சிகிச்சை ஓவர்
சாதாரண காயம் தானே என நினைத்த விஷாலுக்கு, அந்த காயத்திற்கு சிகிச்சை பெற கேரளா வரை செல்லவேண்டிய சூழல் உருவானதும் தான் எவ்வளவு பெரிய அடி என்பதை உணர்ந்தார். கேரளாவில் சிகிச்சை முடிந்த நிலையில், சென்னை திரும்பிய நடிகர் விஷால், மீண்டும் விமானம் மூலம் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
லத்தி கிளைமேக்ஸ்
மீண்டும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தது ரொம்பவே மகிழ்ச்சியை தருகிறது. லத்தி படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக பீட்டர் ஹெயின் மாஸ்டர் பிரம்மாண்ட சண்டைக் காட்சியை உருவாக்கி இருக்கிறார் என படக்குழுவினருடன் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோவை நடிகர் விஷால் தற்போது ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











