»   »  'கபாலி'... தாடி வச்ச 'தாதா' ஜஸ்ட் 20 நிமிடம்தானாம்... படம் முழுக்க பட்டையக் கிளப்பும் 'யூத்' ரஜினி!

'கபாலி'... தாடி வச்ச 'தாதா' ஜஸ்ட் 20 நிமிடம்தானாம்... படம் முழுக்க பட்டையக் கிளப்பும் 'யூத்' ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தில் தாடி வைத்த தோற்றத்துடன் ரஜினி சுமார் 20 நிமிடம் மட்டுமே வருவதாகவும், மீதமுள்ள காட்சிகளில் அவர் இளமையான தோற்றத்தில் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் தான் கபாலி. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.


இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் என இதுவரை வெளியான அனைத்துமே ஹிட்டடித்துள்ளன. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு உலகளவில் எகிறிக் கிடக்கிறது.


தொடர்ந்து கபாலி படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அந்தவகையில் தற்போது ரஜினியின் கெட்டப் குறித்த தகவல் ஒன்றை இயக்குநர் ரஞ்சித்தே வெளியிட்டுள்ளார்.


2 தோற்றங்கள்...

2 தோற்றங்கள்...

முன்னதாக வெளியான கபாலி போஸ்டர் மற்றும் டீசர்களில் ரஜினி வயதான தோற்றத்தில் தாடியுடன் இருப்பது போன்றும், இளமையான தோற்றத்தில் இருப்பது போன்றும் இருவேறு தோற்றங்கள் வெளியாகின.


இளமையான ரஜினி...

இளமையான ரஜினி...

அதன்படி, படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ரஜினி இளமையான தோற்றத்துடனும், சிறிது நேரம் மட்டும் வயதான டான் வேடத்திலும் வருகிறாராம். அதாவது வயதான ரஜினி 20 நிமிடங்கள் மட்டுமே வருகிறாராம்.


பழைய படங்கள்...

பழைய படங்கள்...

ரஜினியின் இளமையான தோற்றம், 80 - 90களில் உள்ள அவரது திரைப்படங்கள் வருவது போல் அமைந்திருக்குமாம். இதற்கென படக்குழு அவரது பழைய படங்களைப் பார்த்து, நடை, உடை, பாவனைகளை உருவாக்கியுள்ளனராம்.


புரட்சியாளராக...

புரட்சியாளராக...

இந்திய சுதந்திரத்துக்கு முன்பு, பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை கொத்தடிமைத் தொழிலாளிகளாக மலேசியாவுக்கு கொண்டு சென்றனர். அவர்கள் அங்குள்ள ரப்பர் தொழிற்சாலையில் வேலை பார்க்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்தப் படத்தில் அப்படிப்பட்ட தமிழர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் புரட்சியாளர் கதாபாத்திரம் ரஜினிக்கு எனக் கூறப்படுகிறது.


உணர்ச்சிகரமான படம்...

உணர்ச்சிகரமான படம்...

இதுவரை வெளியான தகவல்களின்படி கபாலி ஆக்‌ஷன் படமாக காட்சியளித்தாலும், அது உணர்ச்சிகரமான படமும் கூட என இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இப்படத்தில் ரஜினியின் மனைவியாக ராதிகா ஆப்தேவும், மகளாக தன்ஷிகாவும் நடித்துள்ளனர்.


படத்தின் நீளம்...

படத்தின் நீளம்...

அதோடு, கபாலி படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் நீளமான படம் என வெளியான தகவலையும் படக்குழுவினர் மறுத்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருவதாகவும், சென்சாருக்குப் பின்னரே படத்தின் நேர அளவு தெரியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


விரைவில் சென்சார்...

விரைவில் சென்சார்...

அடுத்தமாதம் 15ம் தேதி கபாலி ரிலீசாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விரைவில் அப்படம் சென்சாருக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Director Ranjith has said that in an interview, 'in Kabali, Rajini will be seen in the old man's look only for about 20 minutes in the film. For the rest of the part, it's the young look that he will be seen in. We used his look of the 1980s as a reference'.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil