»   »  'பிரச்சாரத்துக்கு வாங்க... வெயிட்டா கவனிப்பாங்க அம்மா!' - நடிகர்களுக்கு வலைவிரிக்கும் காக்கி!

'பிரச்சாரத்துக்கு வாங்க... வெயிட்டா கவனிப்பாங்க அம்மா!' - நடிகர்களுக்கு வலைவிரிக்கும் காக்கி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேர்தல் நெருங்க நெருங்க சினிமா பிரபலங்களுக்கு டிமாண்ட் கூடிவிடுவது வழக்கம். எல்லா அரசியல் கட்சிகளும் நடிகர் நடிகைகளுக்கு வலை விரிப்பார்கள். எல்லாம் பிரச்சாரத்துக்காகத்தான்.

இந்தத் தேர்தலுக்கும் அப்படிப்பட்ட வலைவிரிப்பு ஆரம்பமாகிவிட்டது. என்ன... இந்த முறை ஆளும் கட்சியே அந்த வலைவிரிப்பில் தீவிரமாக இறங்கியிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது.

கூட்டணிக் கட்சிகளை நம்பாத இந்தக் கட்சி, உளவுத்துறை போலீசார் மூலம் நடிகர் நடிகைகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறதாம்.

பெரிய திரை, சின்னத் திரை இரண்டிலுமே ஓரளவு பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகளைக் கூட விட்டு வைக்காமல், அழைப்பு விடுக்கிறார்களாம்.

"இந்தத் தேர்தல்ல பிரச்சாரம் பண்ணுங்க... நீங்க நினைச்சுப் பாக்காத அளவுக்கு செய்வாங்க" என்று கூறி அழைக்கிறார்களாம். பல நடிகர் நடிகைகள் சத்தமில்லாமல் 'கமிட்' ஆகிவிட்டதாக தகவல் வருகிறது.

English summary
The ruling party of the state is inviting actors through police officials for election campaign.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil