twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாட்டுக்காக ஓட்டு போடுங்க…உங்களுக்காக மாஸ்க் போடுங்க..பிக் பாஸ் ஆரி அட்வைஸ் !

    |

    சென்னை : தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இந்த வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரி அர்ஜூனன் நடித்துள்ளார்.

    இது கொரோனா காலம் என்பதால் வழக்கத்தை விட தேர்தல் ஆணையம் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இன்னும் 6 நாட்களே

    இன்னும் 6 நாட்களே

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே எஞ்சி உள்ள நிலையல் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    முன்னேற்பாடுகள்

    முன்னேற்பாடுகள்

    100% வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், பல்வேறு வசதியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

    விழிப்புணர்வு வீடியோ

    விழிப்புணர்வு வீடியோ

    இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வழக்கத்தை விட கூடுதல் வாக்குச் சாவடிகளையும், தேர்தல்பணியில் கூடுதலாக ஊழியர்கள் ஈடுபடுத்தி உள்ளது தேர்தல் ஆணையம். இந்த தேர்தலிலும் வாக்களிப்போர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், தொகுதிகள் தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், திரைக்கலைஞர்களைக் கொண்டு விழிப்புணர்வு பாடலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    மாஸ்க் போடுங்க

    இந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நம் அனைவரின் மனங்களை பெற்ற ஆரி அர்ஜூனை வைத்து கொரோனோ விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், மாஸ்க் இல்லாமல் ஓட்டுக்கேட்டு வருவரை ஆரி, முதலில் மாஸ்க் போடுங்க அலச்சியா இருக்காதீங்க என்று அட்வைஸ் செய்கிறார். மேலும், நாட்டுக்காக ஓட்டு போடுங்க...உங்களுக்காக மாஸ்க் போடுங்க என்று கூறுகிறார்.

    English summary
    Election commission released Corona awareness Video
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X