»   »  தேர்தல் அறிவிப்பால் சிக்கலுக்குள்ளான தெறி, 24!

தேர்தல் அறிவிப்பால் சிக்கலுக்குள்ளான தெறி, 24!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழக தேர்தல் அறிவிப்பால் பெரிய பட்ஜெட் படங்கள் இரண்டு சிக்கலுக்குள்ளாகியுள்ளது. அவை விஜய்யன் தெறி மற்றும் சூர்யாவின் 24.

என்ன சிக்கல் என்கிறீர்களா?


முக்கியமானது, வரிச் சலுகை. தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இப்போதுள்ள அரசு எந்த புதிய அரசாணையையும் வெளியிட முடியாது. அதாவது புதுப் படங்களுக்கான வரிச்சலுகை உள்பட.


தெறிக்கு வரிச்சலுகை இல்லை

தெறிக்கு வரிச்சலுகை இல்லை

இதனால் தேர்தலுக்கு முன்பே வரவிருக்கும் விஜய்யின் தெறி, சூர்யாவின் 24 உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் வரிச்சலுகை இருக்காது.
ரூ 7 கோடி நஷ்டம்

ரூ 7 கோடி நஷ்டம்

வரிச்சலுகை கிடைக்காவிட்டால் தெறி படத்துக்கு மட்டும் குறைந்தது ரூ 7 கோடி வரை இழப்பு ஏற்படும். சூர்யாவின் படத்துக்கும் இதே நிலைதான். நடுத்தர பட்ஜெட் படங்களும் இத்தகைய பாதிப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.


ஷூட்டிங் பாதிப்பு

ஷூட்டிங் பாதிப்பு

இன்னொரு சிக்கல், 2.ஓ போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் ஷூட்டிங்குகள் இந்த தேர்தல் அறிவிப்பால் பாதிக்கும் சூழல் உள்ளது.


ஷூட்டிங்குக்கு தேவையான நிதியை மொத்தமாகக் கொண்டு செல்வதில் பெரும் தடையாக போலீசாரின் சோதனை அமைந்துவிடுகிறது. இதனால் படப்பிடிப்பே பாதிக்கும் நிலை.தாணு கோரிக்கை

தாணு கோரிக்கை

எனவே சினிமா ஷூட்டிங்குகளுக்கு பணம் கொண்டு போவதை, வாகன சோதனை என்ற பெயரில் தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு கோரிக்கையாக வைத்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு.


Read more about: theri தெறி
English summary
Big budget movies like Vijay's Theri and Surya's 24 have affected due to the recent election notification.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil