யாரு டா பாலு?.. டியூட் விழாவால் சாய்ராம் கல்லூரி நிறுவனருக்கு அவமானம்?.. கப் சிப்பான விஜே பிரியங்கா
சென்னை: சாய்ராம் கல்லூரி தமிழ்நாட்டில் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றாக திகழ்ந்துவருகிறது. ஆனால் கடந்த சில காலமாகவே அக்கல்லூரி ஆடிட்டோரியத்தில் திரைப்படங்களின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடக்கின்றன. அதற்கு இயக்குநர்கள் அமீர், சசிகுமார் உள்ளிட்டோர் எதிர்ப்பும் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் டியூட் படத்தின் விழாவால் அக்கல்லூரியின் நிறுவனர் பாலுவுக்கு பலத்த அவமானம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பிரபலமான கல்லூரிகளில் ஒன்று சாய்ராம். பல வருடங்களாக செயல்பட்டுவரும் இந்தக் கல்லூரியில் ஏகப்பட்ட மாணவர்களும், மாணவிகளும் படித்திருக்கிறார்கள், படித்துவருகிறார்கள். சென்னையில் அமைந்திருக்கும் இந்த காலேஜில் படிப்பதை கௌரவமாக கருதும் பலரும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இக்கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் ஏகப்பட்ட திரைப்படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களும் நடக்கின்றன.
லியோவும் இங்கேதான்: கோலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டார்களில் ஒருவரான விஜய் நடித்த லியோ உள்ளிட்ட படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவும் இங்கேதான் நடந்தது. அவர் மட்டுமின்றி வளர்ந்துவரும் நடிகர்களின் படங்களுடைய ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டுகள்கூட இங்கேதான் நடந்துகொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், கல்வி செயற்பாட்டாளர்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்துதான் வருகின்றன.
அவர்கள் மட்டுமில்லை: அவர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்த இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர், சசிகுமார் உள்ளிட்டோரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அமீர் இதுகுறித்து அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் சசிகுமார், 'தனது திரைப்படம் தொடர்பான விழாக்களை கல்லூரிகளில் நடத்துவதில் உடன்பாடு இல்லை' என்று தெரிவித்திருந்தார்.

டியூட் விழா சாய்ராம் கல்லூரியில்: இப்படிப்பட்ட சூழலில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் டியூட் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சாய்ராம் கல்லூரியின் ஆடிட்டோரியத்தில்தான் நடந்தது. அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜே பிரியங்கா, 'இந்தக் கல்லூரியின் டியூட் யார்' என்று கேட்க; அங்கு குழுமியிருந்த மாணவர்களோ, 'பாலு' என்று கூறினார்கள். உடனே எதையும் யோசிக்காத பிரியங்கா, 'டேய் பாலு.. டேய் பாலு.. எங்கே டா இருக்க பாலு.. யாரு டா பாலு' என்று கத்தி கேட்டார்.
அவர்தான் முதலாளியே: ஆனால் பின்னர்தான் தெரிந்தது அந்த பாலுதான் சாய்ராம் கல்லூரியின் நிறுவனர் என்று. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், 'பாலு சார். சாய்ராம் கல்லூரியின் நிறுவனரா?' என்று பம்மியபடி கேட்டார். இந்த வீடியோ தீயாக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதனைப் பார்த்த பலரும், இதற்குத்தான் கல்லூரியில் சினிமா நிகழ்ச்சியை நடத்தக்கூடாது. கல்லூரியின் நிறுவனருக்கு இந்த அவமானம் தேவையா என்று கேள்விகளை முன்வைத்துவருகிறார்கள். இனியாவது கோலிவுட்டினர் திருந்துவார்களா என்பதை பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











