சேட்டன்கள் எங்கேயோ போயிட்டாங்க.. அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை இந்த ஆண்டே முந்திய 3 மலையாள படங்கள்!

சென்னை: மலையாளம், கன்னட சினிமா எல்லாம் பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூலை குவிக்கவே குவிக்க வாய்ப்பில்லை என தலை கனத்தில் இருந்த தமிழ் சினிமாவுக்கு தொடர்ந்து இரண்டு மொழி திரையுலகமும் தக்க பாடத்தை புகட்டி வருகிறது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டிய படம் என்கிற பெருமையுடன் உள்ள அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தை வசூலில் 3 மலையாள ஒரே ஆண்டில் முந்தியிருப்பது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய ரெட் அலர்ட்டாகவே மாறியுள்ளது என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Empuraan Thudarum and Lokah beats Ajith Kumar s Good Bad Ugly at Box Office
Photo Credit:

ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் மட்டுமே இந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் சாதனையை தென்னிந்திய சினிமாவில் ஈட்டி தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காந்தாரா சாப்டர் 1 வருது: ஆனால், அந்த இடத்துக்கும் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி வெளியாக காத்திருக்கும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். காந்தாரா படமே 400 கோடி வசூலை கடந்த நிலையில், அதன் 2ம் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டால் தென்னிந்திய சினிமாவில் அதிக வசூலை ஈட்டிய படமாக இந்த ஆண்டு இதுவரை இருக்கும் கூலி படத்துக்கே சிக்கல் என்கின்றனர்.

குட் பேட் அக்லி வசூல்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், ப்ரியா வாரியர், பிரசன்னா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, பிரபு, ஜாக்கி ஷெராஃப், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 200 கோடி வசூலை ஈட்டியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதிகபட்சமாக 247 கோடி வரை அந்த படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த ஆண்டே குட் பேட் அக்லி படத்தின் வசூலை 3 மலையாள படங்கள் அதிலும் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி முந்தியிருப்பது தென்னிந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Empuraan Thudarum and Lokah beats Ajith Kumar s Good Bad Ugly at Box Office
Photo Credit:

எம்புரான்: பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலருடன் இயக்குநர் பிருத்விராஜும் இணைந்து நடித்த எம்புரான் திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி வெளியானது. லைகா தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் வெளியான எம்புரான் திரைப்படம் அதிகபட்சமாக 265 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Empuraan Thudarum and Lokah beats Ajith Kumar s Good Bad Ugly at Box Office
Photo Credit:

தொடரும்: தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான தொடரும் திரைப்படம் இந்த ஆண்டு 250 கோடி வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 3வது முறையாக ஹிருதயப்பூர்வம் படத்தின் மூலம் மோகன்லால் ஹாட்ரிக் 200 கோடி வசூலை சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கல்யாணி பிரியதர்ஷனின் லோகா அந்த சாதனை செய்துள்ளது.

Empuraan Thudarum and Lokah beats Ajith Kumar s Good Bad Ugly at Box Office
Photo Credit:

லோகா: துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான லோகா சாப்டர் 1: சந்திரா படம் அதிரடியாக 250 கோடி வசூலை ஈட்டி அசத்தியுள்ளது. வெறும் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லோகா திரைப்படம் மலையாளத்தில் மோகன்லால் படங்களை முந்தியது மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவுக்கே குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை கொடுத்து ரசிகர்களை கவர முடியும் என்பதை நிரூபித்துள்ளது என்கின்றனர். மலையாள திரையுலகம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் மார்க்கெட்டில் முன்னேறி வரும் நிலையில், தமிழ் சினிமா கதைக்கும் படத்தின் ப்ரொடக்‌ஷனுக்கும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் சம்பள விஷயத்தில் மட்டும் குறியாக இருக்கக் கூடாது என்று கூறுகின்றனர். அடுத்த ஆண்டு கண்டிப்பாக தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் கம்பேக் கொடுக்கும் என நம்புவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X