»   »  செருப்பு ஹீரோ... மழைதான் ஹீரோயின்... விஜய் இயக்குநரின் புதிய படைப்பு இது!

செருப்பு ஹீரோ... மழைதான் ஹீரோயின்... விஜய் இயக்குநரின் புதிய படைப்பு இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' போன்ற தர்மான படங்களைத் தந்தவர் ஜெகன். விஜய் நடித்த புதிய கீதை படத்தின் இயக்குநரும் இவர்தான். இப்போது ஜெகன்நாத் என பெயர் மாற்றம் செய்து கொண்டு, ஒரு சுவாரஸ்யமான படத்தோடு வருகிறார்.

படத்துக்குப் பெயர் என் ஆளோட செருப்ப காணோம்

ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் (தயாரிப்பு நிறுவனத்தின் இந்தப் பெயருக்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது... அது தனியாக) சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தன் சகோதரர் விஜயனுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

En Aaloda Seruppa Kaanom

இப்படத்தில் 'பசங்க' படத்தில் நடித்த பாண்டி 'தமிழ்' என்கிற பெயர் மாற்றத்தோடு நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக 'கயல்' ஆனந்தி நடித்திருக்கிறார்.

படத்தின் டைட்டிலுக்கான காரணத்தை இயக்குநர் ஜெகன்நாத்திடம் கேட்டோம்...

"செருப்பை நாம ஒரு சாதாரண பொருளாகத்தான் பார்க்கிறோம். அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்ல. ஆனா அது நம்மோட வாழ்க்கையிட பல சம்பவங்களை நடத்திட்டுப் போயிடும். ஒவ்வொரு செருப்பின் பின்னணியில் பல தொடர் நிகழ்வுகள் இருக்கும். என் வாழ்க்கையிலேயே கூட, ஒரு செருப்பு முக்கிய நிகழ்வை தள்ளிப் போட காரணமாக அமைந்தது.

En Aaloda Seruppa Kaanom

அப்படிப்பட்ட சுவாரஸ்யங்களின் தொகுப்புதான் இந்த காதல் நகைச்சுவைப் படம்.

இப்படத்திற்கு நாயகனாக நடிக்க பாண்டியை என்னுடைய நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள். நானும் தயக்கத்துடனயே பாண்டியிடம் சென்று இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை நடித்துக் காட்டச் சொன்னேன்.

அந்த காட்சியை நான் எதிர்பார்த்த மாதிரியே பாண்டி நடித்துக் காட்டினார். உடனேயே அவரை இப்படத்திற்கு புக் செய்துவிட்டேன். பாண்டிதான் ஹீரோ என்றதும் ஆனந்தி இதில் நடிக்கத் தயங்கினார். கால்ஷீட் இல்லை என்றார். எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. நானே அவருக்கு நேரடியாக சென்று பாண்டி நடித்துக்காட்டிய வீடியோவை காட்டியதும் ஆனந்தி சம்மதித்தார்.

En Aaloda Seruppa Kaanom

செருப்பும், மழையும் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் வந்து கொண்டே இருப்பதால், இந்த கோடையில் படத்தை வெளியிட்டாலும், மழைக்கால உணர்வை பார்வையாளர்கள் பெறுவார்கள்.

பெரும்பாலான காட்சிகளை கடலூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நிஜ மழையில் எடுத்திருக்கிறோம்.

En Aaloda Seruppa Kaanom

படத்தில் ஹீரோ செருப்பு என்றால், மழைதான் ஹீரோயின்," என்றார்.

இந்தப் படத்தில் யோகி பாபு, சிங்கம் புலி, பால சரவணன் என காமெடி டீமே களமிறங்கியுள்ளது.

மே இறுதியில் திரைக்கு வர உள்ளது இந்தப் படம்.

English summary
En Aaloda Seruppa Kaanom is a love comedy movie directed by Jagannath has scheduled to hit screens in May end.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil