»   »  ‘என் அப்பா’.. கண்ணீரை வரவழைக்கும் 'நாடோடிகள்' அபிநயா!

‘என் அப்பா’.. கண்ணீரை வரவழைக்கும் 'நாடோடிகள்' அபிநயா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனியின் வேண்டுகோளுக்கிணங்க திரையுலகப் பிரபலங்கள் தங்களது அப்பா குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், நடிகை அபிநயா வெளியிட்டுள்ள வீடியோ மிகவும் நெகிழ்ச்சியான ஒன்றாக உள்ளது.

அப்பா என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார் சமுத்திரக்கனி. இப்படத்தில் மூன்று விதமான அப்பாக்களைப் பற்றிய கதைக்களத்தை அவர் கையாண்டிருக்கிறார்.


விரைவில் இப்படம் ரிலீசாக இருக்கிறது.


என் அப்பா...

என் அப்பா...

இந்நிலையில், ‘அப்பா' படத்துக்காகப் பல பிரபலங்கள்கிட்ட இருந்து அவர்களுடைய அப்பாவைப் பற்றிப் பேசச் சொல்லி ட்ரைலர் மாதிரி வீடியோக்களைத் தயார் செய்து வருகிறார் சமுத்திரக்கனி.
சூர்யா, சிவக்குமார்...

இந்தப் பட்டியலில் சிவக்குமார், இளையராஜா, சூர்யா, சசிகுமார், பாண்டிராஜ், பார்த்திபன், நடிகை ரோகினி, மோகன்லால், மஞ்சு வாரியார் உள்பட பலர் இடம் பெற்றுள்ளனர். தங்களது அப்பாக்களைப் பற்றி இந்த வீடியோக்களில் அவர்கள் பேசியுள்ளனர்.


அபிநயா...

அபிநயா...

இந்நிலையில், இந்தப் பட்டியலில் தன் அப்பாவைப் பற்றிய வீடியோவைச் சேர்த்து புதிதாக இணைந்துள்ளார் நடிகை அபிநயா. பிறவியிலேயே வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்ணான அபிநயா, தன் திறமையான நடிப்பால் முதல்படமான நாடோடிகள் படத்திலேயே பேசப்பட்டார்.


அப்பாவின் தியாகம்...

அப்பாவின் தியாகம்...

தொடர்ந்து ஈசன், வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்த அபிநயா, இந்த வீடியோவில் தனது அப்பாவின் தியாகம் குறித்து மனம் திறந்துள்ளார்.


மகள் தந்தைக்காற்றும் உதவி...

மகள் தந்தைக்காற்றும் உதவி...

மகள் தந்தைக்காற்றும் உதவி என்ற தலைப்பில் தன் அப்பாவைப் பற்றி இந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார். முதலில் அபிநயா தன் மழலை மொழிகளிலில் அப்பாவைப் பற்றி பேசுகிறார். பின்னர், அபிநயா பேசியதை அவரது அம்மா விளக்கமாகக் கூறுகிறார்.


நன்றிக்கடன்...

நன்றிக்கடன்...

அதில், ‘தன் வாழ்நாளையே தனக்காக தியாகம் செய்த தன் அப்பாவிற்கு தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாவும், அந்தக் கடனை எப்படித் தீர்க்கப் போகிறேன் எனத் தெரியவில்லை' என்றும் நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார் அபி.
காட்பாதர்...

கூடவே, இயக்குநர் சமுத்திரக்கனியும் தனக்கு ஒரு அப்பா மாதிரி தான். காட்பாதர். அவருக்கும் தன்னுடைய நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.


English summary
Actress Abinaya has spoke about her father in the promotional video of the movie Appa directed by Samuthirakani,
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil