»   »  எனக்கு இன்னொரு பேர் இருக்கு: முதல் பாதியே 'முடியல'- தியேட்டரில் இருந்து லைவ் ரிப்போர்ட்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு: முதல் பாதியே 'முடியல'- தியேட்டரில் இருந்து லைவ் ரிப்போர்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு இன்னொரு பெயர் இருக்கு படம் காமெடியா, கேங்ஸ்டர் படமா என்பது முதல் பாதி முடிந்தும் தெரியவில்லை என நமது சினிமா ஆசிரியர் ஷங்கர் தியேட்டரில் இருந்து தெரிவித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு. படத்தை எமது சினிமா ஆசிரியர் ஷங்கர் தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கிறார். முதல் பாதி வரை முடிந்துள்ளது.


Enakku Innoru Per Irukku: How is the movie?

இந்நிலையில் முதல் பாதி வரை படம் எப்படி உள்ளது என்பதை அவர் தியேட்டரில் இருந்து லைவாக நமக்கு தெரிவித்துள்ளார்.


* படத்தின் முதல் பாதி முடிந்தும் அது காமெடி படமா, கேங்ஸ்டர் படமா என்ற குழப்பம் தீரவே இல்லை


* சுந்தர் சி. நடித்த முத்தின கத்திரிக்கா படத்தின் கதையை வேறு மாதிரி தந்திருக்கிறார்கள்


* படத்தில் வரும் காதல் காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லை


* இந்த படத்தின் கதாபாத்திரம் ஜி.வி.பிரகாஷுக்கு இம்மியும் பொருந்தவில்லை


* யோகி பாபு தான் படத்தின் பெரிய ஆறுதலாக உள்ளார்


* இடைவேளைக்கு பிறகு மொட்டை ராஜேந்திரன் வருகிறார். அவரை பார்த்ததும் தியேட்டரில் ஒரே சிரிப்பொலி


* திடீர் என ஒரு காமெடி காட்சி, திடீரென ஒரு கொலை, திடீரென காதல் காட்சி, அவ்வப்போது ஆபாச வசனங்கள். முடியல


* படத்தில் சிம்பு, தனுஷ், பாகுபலி, கபாலியை கூட விட்டு வைக்காமல் கலாய்த்துள்ளனர்.

English summary
GV Prakash' Enakku Innoru Per Irukku has reportedly failed to impress the audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil