»   »  எனக்கு இன்னொரு பேர் இருக்கு: மற்றுமொரு திரிஷா இல்ல நயன்தாராவா?

எனக்கு இன்னொரு பேர் இருக்கு: மற்றுமொரு திரிஷா இல்ல நயன்தாராவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜி.வி.பிரகாஷின் எனக்கு இன்னொரு பேர் இருக்கு திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் ஜூன் 17 ம் தேதி வெளியாகிறது.

டார்லிங், திரிஷா இல்லேன்னா நயன்தாரா என 2 வெற்றிப்படங்களுக்கு பின்னர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.


Enakku Innoru Peru Irukku June 17 Release

இது ஹாட்ரிக் ஹிட் கொடுக்க வேண்டும் எனக் காத்திருந்த ஜி.வி.பிரகாஷுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தனது விட்டது. இதனால் தன்னுடைய அடுத்த படமான எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்.


இந்நிலையில் ஜூன் 17ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு தணிக்கைக் குழு யூ/ஏ சான்றிதழை அளித்துள்ளது. இதன் மூலம் டார்லிங், திரிஷா இல்லேன்னா நயன்தாரா, பென்சில் வரிசையில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படமும் இணைந்துள்ளது.


தணிக்கையில் யூ சான்றிதழ் பெரும் படங்களுக்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைக்கும். மேலும் யூ சான்றிதழ் பெறுகின்ற படங்களை குடும்பத்துடன் பார்க்கலாம் என்பதால் குடும்ப ரசிகர்களின் ஆதரவும் அப்படத்திற்கு கிடைக்கும்.


இதனால் தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெறும் படங்களில் ஒருசில காட்சிகளை பலி கொடுத்தாவது, யூ சான்றிதழ் பெற திரையுலகினர் முயற்சி செய்வார்கள்.


ஆனால் ஜி.வி.பிரகாஷ் விஷயத்தில் இதெல்லாம் அப்படியே தலைகீழ். தன்னுடைய படங்கள் இளைஞர்களைக் கவர்ந்தால் போதும் என்று நினைக்கிற ஜி.வி.பிரகாஷ் தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் கிடைப்பதையே விரும்புகிறாராம்.


திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்துக்குப் பின் ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி 2 வது முறையாக இணைந்து இதில் நடித்துள்ளனர். இதனால் திரிஷா இல்லேன்னா நயன்தாரா போல இப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
G.V.Prakash's Enakku Innoru Peru Irukku Gets U/A Certificate from Censor Board.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil