»   »  ஜெய்-பிரணிதாவுக்கு வாய்த்த "3 அடிமைகள்"

ஜெய்-பிரணிதாவுக்கு வாய்த்த "3 அடிமைகள்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:ஜெய்-பிரணிதா நடிக்கவிருக்கும் 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

ஜெய் நடிப்பில் கடைசியாக வெளியான புகழ் எதிர்பார்த்த புகழைத் தரவில்லை. இதனால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஜெய்க்கு உண்டாகியிருக்கிறது.


Enakku Vaaitha Adimaigal movie pooja today

தற்போது ராட்சஸன், சென்னை 28 படத்தின் 2 வது பாகம், அஞ்சலியுடன் ஒரு படம் ஆகியவற்றில் ஜெய் நடித்து வருகிறார். இந்நிலையில் மகேந்திர ராஜாமணி இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்துக்கு எனக்கு வாய்த்த அடிமைகள் என்று பெயர் சூட்டியுள்ளனர்.


இதில் ஜெய்க்கு ஜோடியாக பிரணிதாவும், அவரின் அடிமைகளாக காளி வெங்கட், கருணாகரன், நவீன் ஆகியோரும் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் நான் கடவுள் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார்.


சமீபத்தில் வாட்ஸ் ஆப் குரூப் தோற்றத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வித்தியாசமான முறையில் வெளியிட்டிருந்தனர்.தொடர்ந்து இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளனர்.


Enakku Vaaitha Adimaigal movie pooja today

முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து உருவாகும் இப்படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். ஆக்ஷன் ரசிகர்களிடம் எடுபடவில்லை. காமெடியாவது ஜெய்யைக் கரை சேர்க்குமா? பார்க்கலாம்.


English summary
Jai & Pranitha starrer Enakku Vaaitha Adimaigal movie Pooja Held today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil