»   »  "எந்திரன் 2" லேட்டாவது நல்லதா கெட்டதா?

"எந்திரன் 2" லேட்டாவது நல்லதா கெட்டதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் பட உலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும் தமிழ்த் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியும் மூன்றாவது முறையாக இணைய இருக்கும் எந்திரன் 2 படம் சில பல காரணங்களால் தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டு இருக்கிறது. இது ரசிகர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளதாம்.

தமிழ் திரை உலகை தன் பிரமாண்ட இயக்கத்தால் அடுத்த கட்டத்துக்கு எடுத்துக் சென்ற இயக்குனர் ஷங்கர் முதல் முறையாக ரஜினியை வைத்து சிவாஜி படத்தை எடுத்ததன் மூலம் அவருடன் இணைந்தார்.

இரண்டாம் முறையாக ரஜினியுடன் இணைத்த எந்திரன் படம் 100 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது இந்த படம் வசூல் ரீதியில் மிகப் பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து எந்திரன் 2 படத்தில் இருவரும் மீண்டும் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி கிட்டத் தட்ட பட ஷூட்டிங் செல்ல இருந்த நிலையில் படம் தள்ளிப் போயிருக்கிறது.

எந்திரன்

எந்திரன்

இரு வேடங்களில் விஞ்ஞானி வசீகரனாகவும் சிட்டி ரோபோவாகவும் நடித்து இருந்த ரஜினி படத்தில் அதகளப்படுத்தி இருப்பார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் ப்ளாக் பஸ்டர் வெற்றி அடைந்தது. திருமணத்திற்குப் பின் ஐஸ்வர்யா ராய் நடித்த தமிழ்ப் படம் இது.

லிங்காவைத் தொடர்ந்து எந்திரன் 2

லிங்காவைத் தொடர்ந்து எந்திரன் 2

லிங்கா படத்தைத் தொடர்ந்து எந்திரன் 2 படத்தை ஷங்கர் இயக்க ரஜினி நடிப்பதாக இருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு படத்தை பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்று ரஜினியே ஷங்கரிடம் கூறி இருந்தாராம்.

ஹீரோவுக்கு இணையான வில்லன்

ஹீரோவுக்கு இணையான வில்லன்

எந்திரன் 2 படம் தாமதமாவதே வில்லனால் தான். ஆமாம் படத்தில் ரஜினிக்கு சரிசமமான வில்லன் வேடத்தில் பெரிய நடிகர் ஒருவரை நடிக்க வைக்க ஷங்கர் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறார்.

முதலில் அமீர் பின்பு கமல் தற்போது விக்ரம்

முதலில் அமீர் பின்பு கமல் தற்போது விக்ரம்

இந்த படத்தில் வில்லனாக நடிக்க முதலில் அமீர்கானைக் கேட்டு அவர் மறுக்க பின்பு கமலைக் கேட்டார்கள். அவர் பல காரணங்களைக் கூறி விருப்பமில்லை என்று கூறி விட்டார். இப்போது நடிகர் விக்ரமை கேட்டு இருக்கிறார்கள்.

சுற்றுலா போன விக்ரம்

சுற்றுலா போன விக்ரம்

விக்ரம் தற்போது குடும்பத்தினருடன் கோடை சுற்றுலாவிற்கு சென்று இருக்கிறார். அவர் வந்த பின்பு தான் நடிப்பாரா மாட்டாரா என்பது தெரிய வரும்.

தயாரிப்பாளர்கள் ரெடி

தயாரிப்பாளர்கள் ரெடி

இன்னும் படமே உறுதியாகாத நிலையில் ஐங்கரன் நிறுவனம் படத்தை தயாரிக்க கத்தி பட பிரச்சினையில் காயப்பட்ட லைக்கா நிறுவனம் அதற்கு நிதி அளிக்க முன்வந்துள்ளது.

240 கோடி பட்ஜெட்

240 கோடி பட்ஜெட்

இதுவரை இல்லாத அளவிற்கு படத்தை பெரும் தொகையில் எடுக்க இருக்கிறார்கள். இப்போதைக்கு ரூ. 240 கோடி திட்டம் என்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என் மும்மொழிகளிலும் படத்தை எடுக்க இருப்பதால் படம் கையைக் கடிக்காது என்பது தயாரிப்பாளர்களின் எண்ணம்

அவருக்குப் பதில் இவர்

அவருக்குப் பதில் இவர்

ஷங்கரின் ஆஸ்தான எழுத்தாளர் சுஜாதாவின் மரணத்திற்குப் பின் ஷங்கரின் வசனங்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இது கடந்த படமான ஐ படத்தில் வெட்ட வெளிச்சமானதைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகனுடன் கைகோர்க்க உள்ளார் ஷங்கர்.

ரஜினியின் புதிய படம் ரஞ்சித்துடன்

ரஜினியின் புதிய படம் ரஞ்சித்துடன்

இந்த செய்திகளுக்கு மத்தியில்தான் ரஜினியின் அடுத்த படத்தை அட்டக்கத்தி இயக்குனர் ரஞ்சித் இயக்கப் போகும் செய்திகள் வெளியாகின. இந்தப் படத்தை முடித்து விட்டுத்தான் எந்திரன் 2க்கு வருகிறார் ரஜினி.

உடம்பைப் பார்க்கனுமே

உடம்பைப் பார்க்கனுமே

இது ரசிகர்களுக்கு கவலை தருவதாக அமைந்துள்ளதாம். காரணம், ரஞ்சித் படத்தை முடித்து விட்டு வந்ததும், எந்திரன் 2 படத்தில் நடிக்க ரஜினிக்கு உடல் நிலை ஒத்துழைக்க வேண்டும். ஷங்கர் வேறு மாதக் கணக்கில் படம் எடுப்பவர். எனவே ரஜினிக்கு ஓவர் ஸ்டிரெஸ் ஆகப் போகிறது என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

பார்க்கலாம், ஷங்கர் மனதில் என்ன உள்ளது என்று.

English summary
It is also said that Rajinikanth and Shankar have met recently to discuss about a possible project but it is unclear whether it is for Endhiran-2 or not.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil