தீபாவளி சரவெடி… எனிமி ரிலீஸ் தேதி அறிவிப்பு… கொல மாஸ் தான் போங்க !

சென்னை : எனிமி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தில் விஷால், ஆர்யா, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், மிருணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார், ஆர்.டிராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எனிமி

எனிமி

அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் எனிமி படத்தை இயக்கியுள்ளார். விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். முழுக்க ஆக்ஷன் அதிரடி திரைப்படமாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தை மினி ஸ்டுடியோ தயாரித்துள்ளது.

விஷால் ஆர்யா

விஷால் ஆர்யா

இந்த திரைப்படத்தின் பல காட்சிகள் சென்னையில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்துள்ளார். இவர்கள் இருவரும் பாலாவின் இயக்கத்தில் உருவான அவன் இவன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதையடுத்து நீண்ட நாட்களுக்குப்பிறகு இருவரும் எனிமி படத்தில் இணைந்துள்ளனர்.

சுவாரசியமான கதை

சுவாரசியமான கதை

எனிமி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளன. பால்யத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் வளர்ந்த பிறகு ஒருவன் பணத்துக்கு கொலை செய்யும் கொலையாளியாகவும், இன்னொருவன் மளிகைக்கடை வைத்திருப்பவனாகவும் மாறுகிறான். ஒருகட்டத்தில் இருவரும் சந்திக்க வேண்டி வருகிறது. இந்த நேரத்தில் வில்லனின் மனைவியை யாரோ கொன்று விடுகிறார்கள். நாயகன்தான் அதனை செய்திருக்க வேண்டும் என வில்லன் அவனை துரத்துகிறான். இறுதியில் என்ன நடக்கிறது என்பதை மிகவும் சுவாரசியமாக இயக்குநர் கொடுத்து இருக்கிறார்.

தீபாவளிக்கு ரிலீஸ்

தீபாவளிக்கு ரிலீஸ்

இந்நிலையில் எனிமி திரைப்படம் தீபாவளிக்கு நவம்பர் 4ந் தேதி திரையரங்கில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இத்திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது. எனிமி திரைப்படம் தீபாவளி வெளியாகும் என்ற தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 கொல மாஸ்

கொல மாஸ்

ரஜினிகாந்தின் அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அதேபோல வெங்கட்பிரபு இயக்கி சிம்பு நடித்துள்ள மாநாடு வெளியாக உள்ளது. நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த அருண்விஜய்யின் வா டீல் திரைப்படமும் நவம்பர் 4ந் தேதி வெளியாக உள்ளது. அந்த சரவெடி வரிசையில் தற்போது விஷாலின் எனிமி திரைப்படும் சேர்ந்துள்ளது. இந்த தீபாவளி கொல மாஸாக இருக்கப்போகிறது சினிமா பிரியர்களுக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X