»   »  என்ஜினியர்கள் தினம்: தமிழ் சினிமாவின் தலைசிறந்த 'என்ஜினியர்கள்'

என்ஜினியர்கள் தினம்: தமிழ் சினிமாவின் தலைசிறந்த 'என்ஜினியர்கள்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று என்ஜினியர்கள் தினம். நாடு முழுவதும் தங்களது தினத்தை அனைத்து என்ஜினீயர்களும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த தினத்தில் தமிழ் சினிமாவில் என்ஜினீயர்களாக நடித்து மக்களிடம் வரவேற்பைப் பெற்ற சிறந்த என்ஜினீயர்களைப்(நடிகர்கள்) பற்றி இங்கே பார்க்கலாம்.

நாம் பார்க்கப் போகும் அனைவருமே தங்களது படங்களில் படம் முழுவதுமே என்ஜினியர்களாக நடித்து நம்மைக் கவர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்லுன்னு ஒரு காதல்

சில்லுன்னு ஒரு காதல்

சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடிகர் சூர்யா மெக்கானிக்கல் என்ஜினியராக நடித்திருப்பார். பூமிகா மற்றும் ஜோதிகா என 2 ஹீரோயின்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருந்தார் சூர்யா. படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் கூட, சூர்யாவின் நடிப்பு மற்றும் பாடல்கள் பெரிதாக ரசிகர்களைக் கவர்ந்தன.

நண்பன்

நண்பன்

இந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற 3 இடியட்ஸ் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து நண்பன் என்று பெயர் வைத்திருந்தார் இயக்குநர் ஷங்கர். விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா மூன்று பேரும் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்தில் நடிகர் விஜய் மற்றும் ஜீவா இருவரும் என்ஜினீயர்களாக நடித்திருந்தனர். தமிழக அரசின் முதல் வரிவிலக்கு பெற்ற திரைப்படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை இல்லாப் பட்டதாரி

வேலை இல்லாப் பட்டதாரி

என்ஜினியரிங் முடித்து விட்டு வேலையில்லாமல் திண்டாடும் மாணவர்களைப் பற்றிய ஒரு முழுமையான திரைப்படமாக வெளிவந்த இப்படம் தனுஷின் திரைப்படங்களில் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது.வெறும் 8 கோடியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சுமார் 50 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது. இந்தத் தீபாவளிக்கு வேலை இல்லாப் பட்டதாரி பார்ட் 2 வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்

என்ஜினியரிங் படித்து விட்டு சிறு சிறு சோதனை முயற்சிகள் செய்து பார்க்கும் நபராக இந்தப் படத்தில் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக நடித்திருந்தார் நகுல். அட்டக் கத்தி தினேஷ் மற்றும் நகுல் என 2 நாயகர்களின் இயல்பான நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் இந்த வருடத்தின் வெற்றித் திரைப்படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Engineer's Day Special: a Few of our Favourite Actors & Related Some Engineering Movies( Nanban, Sillunu Oru kaadhal, Velaiyilla Pattathari,Tamiluku En Ondrai Aluthavum) Here.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil