»   »  இங்க யார்தான் சார் இன்ஜினியர் இல்ல... - #EngineersDay

இங்க யார்தான் சார் இன்ஜினியர் இல்ல... - #EngineersDay

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இன்று தேசிய பொறியாளர் தினம். திரும்பிய பக்கமெல்லாம் இன்ஜினியர்களைக் கொண்ட நாடு இது. ஆனாலும், கட்டுமானம் தொடங்கி ஐ.டி வரை இன்னும் நாம் தன்னிறைவு பெறவில்லை.

'சும்மாதான இருக்க... இந்த வேலையைப் பாரு' என்கிற வசனத்தைக் கேட்காத சமகால இன்ஜினியர்களே இருக்க முடியாது. ஒரு காலத்தில் இன்ஜினியர்கள் என்றால் பெரிய அந்தஸ்து அளித்த சமூகம் 'நீயும் இன்ஜினியரா..' எனக் கேட்கும் அளவுக்கு ஆக்கிவிட்டன பொறியியல் கல்லூரிகள்.

போதாக்குறைக்கு, இன்ஜினியரிங் படித்தவர்களை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்கிற படங்களும் சினிமாவில் நிறைய வந்துவிட்டன. அவற்றில் சில மட்டும் பொறியாளர்களை காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள வைக்கும்.

யார்தான் இன்ஜினியர் இல்ல? :

யார்தான் இன்ஜினியர் இல்ல? :

'காதலும் கடந்து போகும்' படத்தில் விஜய் சேதுபதி மடோனாவிடம் 'ஏய் நீ இன்ஜினியரா?' எனக் கேட்பார். அதற்கு மடோனா, 'தமிழ்நாட்ல யார்தான் இன்ஜினியர் இல்ல... எல்லோரும் இன்ஜினியர்தான்' என்பார். பெருமைப் பட்டுக்கொள்ளவேண்டிய தருணம் என்றாலும் இன்ஜினியர் வாழ்க்கையின் யதார்த்தம் கொஞ்சம் வலிக்கவே செய்யும்.

வேலையில்லா பட்டதாரி :

'சும்மாவே' திரிந்த பொறியாளர்களும் கெத்தாகச் சொல்லிக்கொள்ள 'வேலையில்லா பட்டதாரி' படம் வெளிவந்தது. வேலை கிடைக்காமல் அலையும் தனுஷ் இறுதியாக சமூக ஊடகத்தைத் துணைக்கு அழைத்து சக பொறியாளர்களைச் சேர்த்து முன்னுக்கு வருவார். லாரி, பஸ் என கிடைத்ததில் எல்லாம் ஏறிவரும் வேலையில்லாத பொறியாளர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்கிற உண்மையையும் சொல்லியது அந்தப் படம்.

எல்லாம் நம்ம பயகதேன் :

எல்லாம் நம்ம பயகதேன் :

இன்ஜினியர்னா சும்மாவா என தனுஷ் ஒரு டயலாக்கை ஒண்ணேகால் நிமிடம் மூச்சுவிடாமல் பேசுவார். அந்த வசனத்திற்குப் புல்லரித்துப் போன பொறியாளர் நண்பர்கள் ஏராளம். தமிழில் பெரும்பான்மையாக இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவ்ர்களாலேயே பல நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது இந்தப் படம்.

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் :

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் :

இந்தப் படத்தின் ஹீரோ நகுல் எலெக்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர். சோலார் பவரில் ஓடுகிற ஸ்கூட்டரில் தொடங்கி செல்போன் டவரை வைத்து மின்னணுத் தொடர்பில் வித்தைகள் செய்வது வரை அவருக்கு அத்தனையும் அத்துப்படி. கற்றுக்கொள்கிற, கற்றுக்கொடுக்கிற இன்ஜினியர்களுக்கு வாழ்வு எப்போதும் பிரகாசமே.

சில்லுனு ஒரு காதல் :

சில்லுனு ஒரு காதல் :

இந்தப் படத்தில் சூர்யா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவராக வருவார். காலேஜ் ரெண்டாவது வருசத்துலேருந்து எங்க கன்ட்ரோலுக்கு வந்துச்சு' என டயலாக் பேசுவார். அதைப் பார்த்தே மெக்கானிக்கல் பிரிவில் படித்தவர்களும் இருக்கிறார்கள். அதெல்லாம் கன்ட்ரோலுக்கு வரும்தான். படிச்சு முடிச்சதும் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்துச்சா ப்ரோ?

அந்தக்கால இன்ஜினியர் :

அந்தக்கால இன்ஜினியர் :

'லிங்கா' படத்தில் ரஜினிகாந்த் இன்ஜினியராக நடித்திருப்பார். அவர் அணைகள் கட்டிய அந்தக் காலத்துல இன்ஜினியர்களைத் தேடிப் பிடிக்க வேண்டியிருக்கும். இப்போது நிலைமை அப்படியா? அடி பைப்பு கட்டுறதுக்குக் கூட பத்து இன்ஜினியர்கள் விழுந்தடிச்சு ஓட ரெடியா இருக்காங்க.

கொசாக்ஸி பசப்புகழ் :

கொசாக்ஸி பசப்புகழ் :

'நண்பன்' பட விஜய்யைப் போல இன்ஜினியரிங்கை விருப்பத்தோடு தேர்ந்தெடுத்து கனவை நோக்கி உயர்பவர்கள் இங்கே வெகு சொற்பம். கற்றுக்கொண்ட வித்தைகளை இறக்கிப் புதுக் கருவிகளைப் படைக்கிற பிரம்மாக்களாகச் சிலரும் இருக்கிறார்கள். மதிப்பெண்ணை நோக்கி ஓடும் சமூகத்தில் தனித்துத் தெரிந்தது கொசாக்ஸி பசப்புகழ்தான்.

English summary
India is the country that have engineers around all of us. Several tamil cinemas have been released about engineers life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil