For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ’எஞ்சாய் எஞ்சாமி’பாடலுக்கு யாரும் டியூன் தரவில்லை..நானே எழுதினேன்..தெருக்குரல் அறிவு உருக்கம்!

  |

  சென்னை : 'எஞ்சாய் எஞ்சாமி' பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

  Recommended Video

  Enjoy Enjaami Copyrights Issue - Santhosh Narayanan Arivu இடையே தொடரும் சர்ச்சை *TamilNadu

  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி ஆடியுள்ள என்ஜாய் எஞ்சாமி பாடல் தான் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

  கடந்த ஆண்டு மார்ச் யூடியூப் தளத்தில் வெளியான இந்த பாடல் வெறும் 28 நாட்களிலேயே 100 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்து தற்போது 40 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

  போச்சு.. எல்லாம் போச்சு.. இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டானே.. உச்சகட்ட கோபத்தில் இயக்குநர்! போச்சு.. எல்லாம் போச்சு.. இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டானே.. உச்சகட்ட கோபத்தில் இயக்குநர்!

  'எஞ்சாய் எஞ்சாமி‘

  'எஞ்சாய் எஞ்சாமி‘

  வெளிநாட்டு ஆல்பம் பாடல்களை போல அருமையான மேக்கிங்கில் நம்ம ஊரு கிராமத்தையும் மண் மனத்தையும் சேர்த்து தெருக்குரல் அறிவு மற்றும் தீ இணைந்து ஆடி பாடி இந்த என்ஜாய் எஞ்சாமி கேட்பவர்களை அடுத்த நொடியே ஈர்ப்பது போல அமைந்திருந்தது. இயக்குநர் அமித் கிருஷ்ணா இயக்கத்தில் ஆல்பம் பாடல் மிகவும் அற்புதமாக உருவாகி இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மயக்கும் விதமாகவும், ஆழமான கருத்துக்களை கொண்ட பாடலாக இந்த பாடல் இருந்தது.

  உருக்கமான பதிவு

  உருக்கமான பதிவு

  இந்நிலையில், எஞ்சாய் எஞ்சாமி பாடலை பாடிய அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு நான் இசையமைத்தேன்..எழுதினேன்.. பாடினேன்.. நடித்தேன். யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ எழுதி கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் இந்த பாடலுக்காக கழித்தேன்.

  இது ஒரு சிறந்த டீம் ஒர்க்

  இது ஒரு சிறந்த டீம் ஒர்க்

  இது ஒரு சிறந்த டீம் ஒர்க் என்பதில் சந்தேகமில்லை. அந்த பாடலில் அனைவருடைய பங்களிப்பும் இருக்கும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமை என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல. என்னுடைய ஒவ்வொரு பாடலும் இன்றைய தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும். இந்நாட்டில் 10000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, அன்பு, அவர்களின் எதிர்ப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள்.

  உண்மை எப்போதும் வெல்லும்

  உண்மை எப்போதும் வெல்லும்

  இவை அனைத்தும் அழகான பாடல்களின் மூலம் உன்னிடம் பேசுகிறது. ஏனென்றால் நாம் இரத்தமும் வியர்வையுமான விடுதலைக் கலைகளின் மெல்லிசைகளாக மாறிய தலைமுறை. பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் உங்களிடம் இருப்பதை யாராலும் பறித்துவிட முடியாது. ஜெய்பீம் என்று குறிப்பிட்டு இறுதியில் உண்மை எப்போதும் வெல்லும் என பதிவிட்டுள்ளார்.

  English summary
  'Enjoy Enjaami' arivu emotional post on her instagram page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X