For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எஞ்சாயி எஞ்சாமி சர்ச்சை..அறிவு ஓரம் கட்டப்பட்டாரா? பாடகி 'தீ'யின் விளக்கம்!

  |

  சென்னை : எஞ்சாயி எஞ்சாமி பாடல் குறித்து தொடர்ந்து வரும் சர்ச்சைக்கு பாடகி தீ முழு விளக்கம் அளித்துள்ளார்.

  Recommended Video

  Enjoy Enjami சர்ச்சை, உங்கள் பொக்கிஷத்தை அபகரிக்கலாம், யாரும் Tune கூட தரல *Entertainment

  வெளிநாட்டு ஆல்பம் பாடல்களை போல அருமையான மேக்கிங்கில் நம்ம ஊரு கிராமத்தையும் மண் மனத்தையும் சேர்த்து தெருக்குரல் அறிவு மற்றும் தீ இணைந்து ஆடி பாடி இந்த என்ஜாய் எஞ்சாமி கேட்பவர்களை அடுத்த நொடியே ஈர்ப்பது போல அமைந்திருந்தது.

  இயக்குநர் அமித் கிருஷ்ணா இயக்கத்தில் ஆல்பம் பாடல் மிகவும் அற்புதமாக உருவாகி இருந்தார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மயக்கும் விதமாகவும், ஆழமான கருத்துக்களை கொண்டதாக இந்த பாடல் இருந்தது.

  வலிமை இயக்குநருடன் இணையும் கமல்ஹாசன்.. என்ன தொடர்ந்து படங்களை கமிட் செய்யறாரு! வலிமை இயக்குநருடன் இணையும் கமல்ஹாசன்.. என்ன தொடர்ந்து படங்களை கமிட் செய்யறாரு!

  எஞ்சாயி எஞ்சாமி சர்ச்சை

  எஞ்சாயி எஞ்சாமி சர்ச்சை

  செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடையில் எஞ்சாயி எஞ்சாமி பாடலை பாடகி தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் இருவரும் இணைந்து பாடினர். பாடகர் அறிவு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இது மேலும் சர்ச்சைகளை கிளப்பியது. இதையடுத்து, அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு நான் இசையமைத்தேன்..எழுதினேன்.. பாடினேன்.. நடித்தேன். யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ எழுதி கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் இந்த பாடலுக்காக கழித்தேன் என பதிவிட்டு இருந்தார்.

  இது ஒரு சிறந்த டீம் ஒர்க்

  இது ஒரு சிறந்த டீம் ஒர்க்

  இதற்கு விளக்கம் அளித்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அறிவு மற்றும் கலைஞர்களுக்கு பக்கபலமாக நான் எப்போதும் நின்றிருக்கிறேன். அறிவு ஒரு அற்புதமான கலைஞன் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். எஞ்சாய் எஞ்சாமி பாடல் குழுவின் கூட்டு முயற்சி என்று சந்தோஷ் நாராயணன் கூறியிருந்தார்.

  பாடகி தீ விளக்கம்

  பாடகி தீ விளக்கம்

  இந்நிலையில்,பாடகி தீ தனது சார்பில் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், ரோலிங் ஸ்டோன் இந்தியா அட்டைப்படம் தொடங்கி செஸ் ஒலிம்பியாட் வரை நடந்த அனைத்து சர்ச்சைக்கும் விளக்கம் அளித்துள்ளார். அதில், எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன்.

  மூவருக்கும் சமமாக பகிரப்பட்டது

  மூவருக்கும் சமமாக பகிரப்பட்டது

  பாடலுக்கான அர்த்தங்கள் மற்றும் அதன் கதைகள் பெரும்பாலானவற்றை பாடல் வெளியான பின் நான் தெரிந்துகொண்டேன். அறிவு சொன்னது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது என நம்பி, அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன.

  அட்டை பட சர்ச்சை

  அட்டை பட சர்ச்சை

  கடந்த ஆண்டு வெளியான ரோலிங் ஸ்டோன் இந்தியா இதழின் அட்டைப்படத்தில் நானும், ஷானும் இடம் பெற்றிருந்தோம். எங்கள் இணைப்பில் (தீ மற்றும் ஷான்) அடுத்து வரவுள்ள ஆல்பத்துக்கான அட்டைப்படமே அது. மற்றபடி, அது எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கானதோ அல்லது நீயே ஒலி பாடலுக்கானதோ அல்ல.

  அனைவருக்கும் நன்றி

  அனைவருக்கும் நன்றி

  செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் என்னுடன் அறிவையும் பங்கேற்பதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர். அறிவு அமெரிக்காவில் இருந்ததன் காரணமாக அவரால் பங்கேற்க முடியாமல் போனது. எஞ்சாயி எஞ்சாமி பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மஜ்ஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் என் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பால் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் பிறந்தது என்று பாடகி தீ நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.

  English summary
  Enjoy Enjaami Controversy singer dhee explanation
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X