»   »  மழைக்காதலரா நீங்கள்? ஜன்னல் மழையோடு நனையலாம் இங்கே... #MusicWithRain

மழைக்காதலரா நீங்கள்? ஜன்னல் மழையோடு நனையலாம் இங்கே... #MusicWithRain

By Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்த மழைநாளில், கையில் தேநீர்க் கோப்பையோடு இந்தப் பாடல்களைக் கேட்டு ரசிப்பது உங்களுக்குள் புத்துணர்ச்சி விதைக்கும். மழைக்கு இதமாக சில பாடல் பரிந்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன.

லேட்டஸ்ட் முதல் க்ளாசிக் வரையான பாடல்களில் நீங்கள் ரசித்த பாடல்களை கமென்டில் சொல்லலாம்... சாரல் மழையோடு மனதும் தூறட்டும்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி இருக்கிறது. கொட்டித் தீர்க்கும் கனமழையால் நகர்ப் புறங்களில் சிரமம் ஏற்பட்டாலும் அதனை மக்கள் இன்முகத்தோடு வரவேற்று வருகின்றனர்.

வடகிழக்குப் பருவமழை

வடகிழக்குப் பருவமழை

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலை முதலே கொட்டித் தீர்க்கும் மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களை பள்ளிகள் முன்கூட்டியே விட்டதால் குழந்தைகளும் இந்த மழையால் ஹேப்பி.

இன்னும் மழை நீடிக்கும்

இன்னும் மழை நீடிக்கும்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சோ, மழை நாளை அழகாக ரசிக்க ஆயத்தமாகுங்கள்.

மழை ஸ்பெஷல்

இந்த மழை நாட்களில் வீட்டுக்குள்ளேயே போரடிக்காமல் ஒரு டீயோடு இந்தப் பாடல்களைக் கேட்டு மகிழலாம். Wync Music இசைத்தளம் மழைக்கு இதமாகக் கேட்டு ரசிக்க 30 பாடல்களின் ப்ளேலிஸ்ட்டை உருவாக்கியியிருக்கிறது. அவற்றில் உங்களது ஃபேவரிட் பாடல்களும் இருக்கலாம். இன்னும் பெஸ்ட்டான சில மழைப் பாடல்கள் கீழே...

விண்ணோடு மேளச் சத்தம்

'நீ வரும்போது நான் மறைவேனா...' என 'மழை' படத்தில் மழையில் ஆடிப்பாடும் பாடலை ஸ்ரேயாவைக் கொஞ்சம் ரசித்தால் பால்யகால மழை நினைவுகளை மீட்கலாம்...

பூவானம் பொத்துக் கொண்டதோ

'நன்னாரே நன்னாரே...' எனத் தொடங்கி 'வெண்மேகம் முட்ட முட்ட பொன்மின்னல் வெட்ட வெட்ட...' என வைரமுத்துவின் மழைத்துளிகளில், இசைப்புயலின் இசைமழையில் நனையத் தயாரா..?

அடடா மழைடா... அடை மழைடா

அடைமழையாக விடாமல் தூறிக் கொண்டிருக்கும் இந்த க்ளைமேட்டுக்கு இந்தப் பாடலைக் கேட்டால் உற்சாகம் பீறிடும் மக்கழே... அப்புறம் என்ன... அறையிலேயே ஆடிப் பாடுங்கள்... குறைந்தபட்சம் மனதையாவது ஆட விடுங்கள்..!

முதல் மழை

மழையும் காதலும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாதவை. ஏதோ ஒரு மழைநாளில் நனைந்தபடி உங்கள் காதலி/காதலனை சந்தித்திருக்கலாம். அந்த முதல் காதல் மழையோடு இந்த 'முதல் மழை என்னை நனைத்ததே...'வை கேட்கலாமே...

புது வெள்ளை மழை

ரஹ்மானின் முதல் படமான 'ரோஜா'வில் இடம்பெற்ற இந்த மழைப்பாடலை ரசிக்கவெல்லாம் காலம் நேரம் பார்க்க வேண்டுமா என்ன? மழை உயிர்ப்பிக்கும்... அன்பை, காதலை, உயிரை, மனதை, உடலை!

என்னைக் கொஞ்ச கொஞ்ச வா மழையே

மழையில் நனைந்தபடி ஐஸ்க்ரீம் சாப்பிட அடம்பிடிக்கும் பழக்கம் உங்களில் யாருக்காவது இருக்கிறதா..? மழையில் நனைந்து விளையாட சூழல் வாய்க்கவில்லையா? ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு இந்தப் பாடலில் நனைந்து மகிழலாம்...

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    In this rainy day, with the cup of tea, listening to these songs will rejuvenate you. To listen to the rain, some songs have been suggested from the classic to latest.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more