»   »  கலைவேந்தன்... காதல் கலந்த ஆக்ஷன் நிறைந்த திரில்லர் படம்

கலைவேந்தன்... காதல் கலந்த ஆக்ஷன் நிறைந்த திரில்லர் படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலைவேந்தன். அருமையான இந்தப் பெயருடன் ஒரு அதிரடி சண்டைக் சாட்சிகள், திரில் காட்சிகள் நிறைந்த ஒரு திரில்லர் படம் தயாராகிறது தமிழில்.

அஜய் - சனம் ஷெட்டி இணைந்து நடிக்க உருவாகி வருகிறதாம் இந்த கலைவேந்தன்.

எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படம்தான் கலைவேந்தன்.

மீண்டும் கலாபவன் மணி...

மீண்டும் கலாபவன் மணி...

பெரிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் கலாபவன் மணி பிசியாகியுள்ளார். பாபநாசம் படத்தால் கிடைத்த வெளிச்சம் அவருக்கு தமிழில் மீண்டும் வாய்ப்புகளை திறந்து விட்டது.

மனோபாலா - குண்டு ஆர்த்தி...

மனோபாலா - குண்டு ஆர்த்தி...

மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், காதல் சுகுமார், குண்டு ஆர்த்தி, சம்பத்ராம், நளினி, தலைவாசல் விஜய், நெல்லை சிவா, ராமச்சந்திரன் ஆதேஷ், சங்கர், யுவராணி, சாதனா, அர்ச்சனா, எஸ்.கமலகண்ணன், காதல் தண்டபாணி லண்டன் ஆனந்த் ஜே.முரளிகுமார், மனோகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பாட்டுக்கு சினேகன் - மெட்டுக்கு ஸ்ரீகாந்த்...

பாட்டுக்கு சினேகன் - மெட்டுக்கு ஸ்ரீகாந்த்...

ஒளிப்பதிவு - எஸ்.கார்த்திக் / பாடல்கள் - சினேகன் / இசை - ஸ்ரீகாந்த் தேவா. தயாரிப்பு நிர்வாகம் - இளையராஜா, மாரியப்பன், செல்வம் மற்றும் தயாரிப்பு - எஸ்.கமலகண்ணன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - ஆர்.கே.பரசுராம்.

என்ன படம்...

என்ன படம்...

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.... ஓவினாம் (வியட்நாம் நாட்டை பூர்விகமாக கொண்ட தற்காப்பு கலை ) கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளில் ஒன்று.

மாஸ்டர் நாயகன்... காதலி நாயகி...

மாஸ்டர் நாயகன்... காதலி நாயகி...

இந்த தற்காப்பு கலையை கற்று கொடுக்கும் மாஸ்டராக வரும் நாயகனுக்கும், நாயகி சனம் ஷெட்டிக்கும் காதல் இவர்கள் காதலுக்கு ஒரு பிரச்னை வருகிறது.

பெற்றோரால் பிரச்சனை.. நாயகி மர்கயா...

பெற்றோரால் பிரச்சனை.. நாயகி மர்கயா...

நாயகியின் பெற்றோரால் அது மேலும் பெரிதாகிறது. இதற்கிடையில் நாயகி கொல்லப்படுகிறாள். கொலை செய்யப்பட்ட தன் காதலியின் கொலைக்கு காரணமானவன் யார் என்று கண்டறிந்து பழி வாங்குவதுதான் படத்தின் திரைக்கதை.

ரெட்டேரி லாரி கிடங்கில் பயங்கர சண்டை...

ரெட்டேரி லாரி கிடங்கில் பயங்கர சண்டை...

படத்தில் சண்டைக் காட்சிகள் பின்னி மில் மற்றும் ரெட்டேரி லாரி கிடங்குகளில் மிக பிரமாண்டமாக படமாக்கி உள்ளோம். ஒவினாம் கலையை பின்னணி கொண்ட படம் என்பதால் இக்கலையில் பயிற்சி பெற்ற நூறு ஒவினாம் கலைஞர்கள் காரைக்காலில் இருந்து அழைத்து வரப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.

குத்துக்குப் பெயர் ஸ்ரீகாந்த் தேவா.. இதில் மெலடியாக..

குத்துக்குப் பெயர் ஸ்ரீகாந்த் தேவா.. இதில் மெலடியாக..

பொதுவாக குத்து பாடல்களுக்கு பெயர் வாங்கும் ஸ்ரீகாந்த்தேவா இந்த படத்தில் அருமையான மெலடி பாடல்களை தந்துள்ளார். காமெடி, காதல் கலந்த ஆக்ஷன், திரில்லர் படமாக கலைவேந்தன் உருவாகி உள்ளது என்றார் இயக்குநர்.

ஆக்‌ஷன் நாயகி...

ஆக்‌ஷன் நாயகி...

இப்படத்தில் ஆக்‌ஷன் நாயகியாக நடித்துள்ளாராம் சனம் ஷெட்டி. மிகவும் சந்தோஷமாக சண்டைக்காட்சிகளில் நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Southern actress Sanam Shetty, who had her first tryst with action in upcoming Tamil thriller "Kalaivendhan", says she thoroughly enjoyed the experience of performing stunts for the "first time in her career".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil