»   »  ரஜினி, கமலுக்கு சமர்ப்பணமாக வரும் 'எங்கிட்ட மோதாதே'!

ரஜினி, கமலுக்கு சமர்ப்பணமாக வரும் 'எங்கிட்ட மோதாதே'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'சாதனை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்ய கூடிய ஒரு படைப்பாக இருக்கும் 'என்கிட்ட மோதாதே' என்று படத்தின் தயாரிப்பாளர் ஈராஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

என்கிட்ட மோதாதே திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கதாநாயகன் நட்டி (எ ) நட்ராஜ், ஈராஸ் சாகர் , படத்தில் மற்றுமொரு கதாநாயகனாக நடித்திருக்கும் ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி , பார்வதி நாயர், இயக்குநர் ராமு செல்லப்பா, இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் , கணேஷ்சந்தரா, பாடலாசிரியர் யுகபாரதி, படத்தொகுப்பாளர் அத்தியப்பன் சிவா , ஸ்டன்ட்மாஸ்டர் மைகேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Enkitta Modhathe will be dedicates to Rajini & Kamal

விழாவில் கவிஞர் யுகபாரதி பேசும்போது, "எனக்கு இயக்குநர் பாண்டியராஜை மிகவும் பிடிக்கும். அவர் பசங்க படத்துக்கு தேசிய விருது வாங்கியதால் அல்ல. அவர் என்னைவிட குள்ளமாக இருப்பதால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு எப்போதும் இயக்குநர்கள் அனைவரும் குள்ளமாக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு அந்த வகையில் இயக்குநர் பாண்டிராஜ் குள்ளமாக இருப்பதால் அவர் மீது எனக்கு தனிப்ரியம். இப்போது 'என்கிட்ட மோதாதே' படத்தின் இயக்குநர் ராமு செல்லப்பாவை அதைவிட எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அவர் இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் மற்றும் அவர் பாண்டி ராஜை விட குள்ளமாக இருப்பார்.

இப்படத்தில் ஒரு பாடல் உள்ளது அப்பாடலுக்கு சங்கர் மகாதேவன் அல்லது கைலாஷ் கேர் ஆகியோரை பாட வைக்கலாம் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது. ஆனால் இயக்குநர் நாம் ஏன் இந்த பாடலுக்கு நட்டி நட்ராஜை பாட வைக்கக் கூடாது? என்று என்னிடமும் இசையமைப்பாளரிடமும் கேட்டார். குரல் சோதனைக்குப் பின்னர் அவரையே பாட வைத்தோம். அந்த பாடல் அருமையாக வந்துள்ளது. நடிகர் நட்ராஜ் பாடகர் நட்ராஜாகவும் தொடரலாம் என்று ஆசைபடுகிறேன். மேலும் இப்படத்தில் ஒரு பாடலை டி.இமான் பாடியுள்ளார்," என்றார்.

விழாவில் ஈரோஸ் சாகர் பேசுகையில், "இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்ய கூடிய ஒரு படைப்பாக இருக்கும். 1980 களில் நடந்த உண்மை விஷயங்களை கொண்ட கதை தான் 'என்கிட்ட மோதாதே", என்றார்.

English summary
Eros International says that their new movie Enkitta Modhathe will be dedicated to veteran actors Rajini and Kamal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil