»   »  தனுஷ் மீண்டும் திருமணம் செய்தாரா?... இணையத்தில் வைரலான புகைப்படம்

தனுஷ் மீண்டும் திருமணம் செய்தாரா?... இணையத்தில் வைரலான புகைப்படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் மணக்கோலத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொடிக்குப் பின் கவுதம் மேனனின் என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.இதில் தனுஷுக்கு ஜோடியாக 'ஒரு பக்கக் கதை' புகழ் மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனுஷ்-மேகா ஆகாஷ் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் நேற்று வலம்வந்தது.

ஆனால் மேகா ஆகாஷ் இன்னும் பலருக்கும் அறிமுகமாகாத காரணத்தால் பலரும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து குழம்பிப் போயினர்.

மேலும் தனுஷ் மீண்டும் திருமணம் செய்து கொண்டாரா? என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்தது. ஆனால் இப்புகைப்படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் எடுக்கப்பட்டது என்பதே உண்மை.

மேகா ஆகாஷ் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகாத காரணத்தால், இப்புகைப்படம் பலரின் மனதிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Ennai Nokki Paayum Thotta: Dhanush- Megha Akash Wedding Still now Goes Viral.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil