»   »  என்னங்க சார் உங்க சட்டம்?..ரசிகர்களைக் கவர்ந்த ராஜு முருகன்

என்னங்க சார் உங்க சட்டம்?..ரசிகர்களைக் கவர்ந்த ராஜு முருகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜோக்கர் படத்திலிருந்து நேற்று வெளியான 'என்னங்க சார் உங்க சட்டம்?' பாடல் வரிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது.

குக்கூ படத்தின் மூலம் எளிமையான காதலை சொன்ன ராஜு முருகன், மக்களின் எளிய அரசியலை பேசும் விதமாக ஜோக்கர் படத்தை எடுத்து வருகிறார்.


Ennanga Sir Unga Sattam Joker Official Lyric Video

ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் என்னங்க சார் உங்க சட்டம்? பாடல் வரிகளை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது.


எளிமையான இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் ஆழமான கருத்துக்கள் புதைந்துள்ளன. தேர்தல் நேரத்தில் வெளியாகியிருக்கும் இப்பாடலுக்கு அறந்தை பாவா, பெருமாள் இருவரும் குரல் கொடுத்திருக்கின்றனர்.


பாடலின் வரிகள் இங்கே உங்களுக்காக..என்னங்க சார் உங்க சட்டம்?
என்னங்க சார் உங்க திட்டம்?
கேள்வி கேட்க ஆளில்லாம
போடுறீங்க கொட்டம்


நூறு கோடி மனிதரு
யாரு யாரோ தலைவரு
ஓட்டு வாங்கிப் போற நீங்க
ஊழலோட டீலரு


ஆண்ட பரம்பர கைநாட்டு
ஆட்டி படைக்குது கார்ப்பரேட்டு
நாட்ட விக்கிற மந்திரிமாருக்கு
நல்லா வைய்யி சல்யூட்டு


ரேஷன் அரிசி புழுவுல
வல்லரசு கனவுல
தேசம் போற போக்க பாத்தா
தேறாதுங்க முடிவுல


கருத்துசொல்ல முடியல
கருப்புப் பணமும் திரும்பல
ஆளுக்காளு நாட்டாமதான்
பார்லிமெண்ட்டு நடுவுல


சொகுசுகாரு தெருவுல
வெவசாயி தூக்குல
வட்டிமேல வட்டிபோட்டு
அடிக்கிறீங்க வயித்துல


கையில் ஃபோனு ஜொலிக்குதா?
ஓசியில் டி.வியும் கெடைக்குதா?
அவரசமா ஒண்ணுக்கும் ரெண்டுக்கும்
ஒதுங்க எடமும் இருக்குதா?


இயற்கை என்ன மறுக்குதா?
எதையும் உள்ள பதுக்குதா?
எல்லாத்தையும் சூறையாட
சர்க்கார் கூட்டிக் கொடுக்குதா?


நல்ல தண்ணி கெடைக்கல
நல்ல காத்து கெடைக்கல
அரசாங்க சரக்குலதான்
கொல்லுறீங்க சனங்கள


ஷான் ரோல்டன் இசையில் என்னங்க சார் உங்க சட்டம்? மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம்.

English summary
Yesterday Director Raju Murugan Released 'Ennanga Sir Unga Sattam' Joker Official Lyric Video.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil