»   »  'இந்தி, இங்க்லீஷ் படங்கள்ல மதிக்கற நீங்க என் மகன் படத்தை கண்டுக்கலையே' புலம்பும் டெல்லி கணேஷ்

'இந்தி, இங்க்லீஷ் படங்கள்ல மதிக்கற நீங்க என் மகன் படத்தை கண்டுக்கலையே' புலம்பும் டெல்லி கணேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், என்னுள் ஆயிரம் படத்தின் தயாரிப்பாளருமான நடிகர் டெல்லி கணேஷ் பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ் ஆப்பில் உலா வந்து கொண்டிருக்கிறது.

அதில் 'தமிழ் வாழ்க, தமிழன் வாழ்க என்று சொல்லுகிறார்கள். ஆனால் தமிழ்ப்படங்களுக்கு ஒரு ஷோ தியேட்டரில் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.


Ennul Aayiram Producer Delhi Ganesh Whats App Speech

இந்திப் படம், தெலுங்குப் படம், இங்க்லீஷ் கார்ட்டூன் படம் இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் தமிழ்ப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.


திருச்சியில் என் படம் ரிலீஸ் ஆகவில்லை. மற்ற மாவட்டங்களில் சிறிய தியேட்டர்கள் மட்டுமே கிடைத்தது. நான் ஒரு ரிலீஸ் தேதி முடிவு செய்தால் அந்தத் தேதிகளில் 'தெறி' வருது அது இது என காரணம் காட்டி ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றார்கள்.


Ennul Aayiram Producer Delhi Ganesh Whats App Speech

ஒருவழியாக 22 ம் தேதி வெளியிட்டால் நீங்க ஒரு 29 ம் தேதி வந்திருக்கலாமே என்று கூறுகிறார்கள். மொத்தத்தில் ஒரு படம் எடுத்து வெளியிட்ட காரணத்தால் நான் பைத்தியக்காரனாகவே ஆகிவிட்டேன்.


சினிமாத் துறையில் இத்தனை வருடத்தில் கற்றுக்கொள்ளாததை இப்போது கற்றுக் கொண்டேன்" என்று நொந்துபோய் கூறியிருக்கிறார்.


அதேநேரம் மகனின் ஹீரோ ஆசையை நிறைவேற்றத்தானே படமெடுத்தீர்கள்? என்று டெல்லி கணேஷ் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ளன.

English summary
Actor Delhi Ganesh Whats App Audio Creates Controversy.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil