»   »  வேணாம், இத்தோட நிறுத்திக்கோங்க, இல்லை...: பிக் பாஸ் பிரபலம் மிரட்டல்

வேணாம், இத்தோட நிறுத்திக்கோங்க, இல்லை...: பிக் பாஸ் பிரபலம் மிரட்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கிண்டல் செய்வதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சோஷியல் மீடியாவில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று நடிகை ஹினா கான் தெரிவித்துள்ளார்.

இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த ஹினா கான் சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் டிவி நடிகை ஷில்பா ஷிண்டேவை டார்கெட் செய்தார்.

அது ஷில்பாவின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதில் இருந்து அவர்கள் ஹினா கானை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நெட்டிசன்ஸ்

நெட்டிசன்ஸ்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஹினா கான் சமூக வலைதளங்களில் என்ன போஸ்ட் போட்டாலும் நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்க்கிறார்கள்.

வருத்தம்

வருத்தம்

ஹினா அழகான உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டபோது நெட்டிசன்கள் அவரை கேவலமாக கிண்டல் செய்தனர்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

தான் என்ன செய்தாலும் நெட்டிசன்ஸ் கிண்டல் செய்வதால் ஹினா கான் கவலை அடைந்துள்ளார். கலாய்ப்பதை நிறுத்திக்கொள்ளாவிட்டால் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

காயத்ரி

காயத்ரி

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி ஆகியோர் என்ன ட்வீட்டினாலும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இதை எதிர்த்து போலீசில் புகார் அளிக்கப் போவதாக காயத்ரி எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
TV actor and former Bigg Boss contestant Hina Khan said that she will delete her social media account if the netizens continue trolling her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X