»   »  எந்திரன் 2 படத்தோட தலைப்பு இனி 2.0

எந்திரன் 2 படத்தோட தலைப்பு இனி 2.0

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் - எமி ஜாக்சன் நடித்து வரும் படத்தின் தலைப்பு இனி எந்திரன் 2 இல்லை 2.0 என்று மாற்றியிருக்கிறார்கள். இதனை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, ஐஸ்வர்யாராய் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு பிரம்மாண்டமாக வெளிவந்த படம் எந்திரன். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றதோடு வசூலில் பெரிய சாதனையையும் படைத்தது. தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஷங்கர் மும்முரமாக களமிறங்கினார். லைகா நிறுவனம் எந்திரன் 2 படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

எளிமையான தொடக்க விழா

ரஜினியின் பிறந்தநாளன்று இப்படத்தின் படப்பிடிப்பை மிகவும் பிரம்மாண்டமாக தொடங்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், மழை வெள்ளம் காரணமாகவும் ரஜினி கேட்டுக் கொண்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு புதன்கிழமையன்று எளிமையான முறையில் தொடங்கப்பட்டது.

படத்தின் தலைப்பு 2.0

படத்தின் தலைப்பு 2.0

எந்திரன் 2 என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு 2.0 என்று மாற்றியிருக்கிறார்கள். 2.0 படத்தில் ரஜினியுடன் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தியாவின் தலைச்சிறந்த கலைஞர்களும், ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றிய கலைஞர்களும் இப்படத்தில் இணைந்து பணியாற்றுவதாக அறிவித்துள்ளது லைகா நிறுவனம்.

வில்லனுக்கு முக்கியத்துவம்

வில்லனுக்கு முக்கியத்துவம்

ரஜினிக்கு வில்லாக ஹாலிவுட் நட்சத்திரம் அர்னால்டு நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஷங்கர் விரும்பினார். அவரை தொடர்பு கொண்டபோது சம்மதித்த அர்னால்டு, தனக்கு சம்பளமாக 120 கோடி ரூபாய் கேட்டதோடு, தங்குமிடம் போக்குவரத்து செலவு என மேலும் பல கோடிகளை அடுக்கியுள்ளார்.

மாறிய வில்லன்

மாறிய வில்லன்

இதனால் ஆளை விடுங்கப்பா அர்னால்டு வேண்டாம் அக்ஷய் குமாரே போதும் என்று முடிவெடுத்து விட்டாராம் ஷங்கர். எப்படியோ ரஜினி படத்தில் வில்லன் மாறியதைப் போல படத்தின் தலைப்பையும் 2.0 என்று மாற்றியிருக்கிறார்கள்.

    English summary
    The shooting of Shankar's much-awaited Rajinikanth-starrer, now being called 2.0 (it's a sequel to Enthiran), began on December 16 in the city.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil