»   »  எந்திரன் 2... முன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பம்... ஒரு ஆண்டு கால்ஷீட் கொடுத்த ரஜினி!

எந்திரன் 2... முன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பம்... ஒரு ஆண்டு கால்ஷீட் கொடுத்த ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 'எந்திரன் 2' படத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகிவிட்டன.

இந்தப் படத்துக்காக கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. அவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு படத்துக்கு இத்தனை நாட்கள் கால்ஷீட் கொடுப்பது இதுவே முதல் முறை.

எந்திரன்

எந்திரன்

2010-ல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'எந்திரன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலைக் குவித்தது.

எந்திரன் 2

எந்திரன் 2

தற்போது ரஜினி - ஷங்கர் இருவரும் மீண்டும் இணைந்து 'எந்திரன் 2' படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அதற்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கிவிட்டன.

அர்னால்ட்

அர்னால்ட்

'எந்திரன் 2' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க முதலில் கமலிடம் பேசினார்கள். அவர் மறுக்க, தொடர்ந்து விக்ரம், ஆமீர்கான் என பேசினார்கள். எதுவும் சரி வராத நிலையில் இப்போது அர்னால்ட்டை அணுகியுள்ளனர். அவரும் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.

கிராபிக்ஸ்

கிராபிக்ஸ்

'எந்திரன் 2' படத்திற்கான காட்சிகள் வடிவமைப்பு அனைத்துமே முடிந்து, எந்த காட்சியில் கிராபிக்ஸ் எப்படி வர வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டாராம் ஷங்கர். ஹாலிவுட் நிறுவனங்களுடன் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

லைக்கா

லைக்கா

'எந்திரன் 2' படத்தில் நாயகனாக ரஜினி, ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். லைக்கா நிறுவனம் வழங்க ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

ஒரு ஆண்டு

ஒரு ஆண்டு

ரஞ்சித் படத்தை 2015ம் ஆண்டிற்குள் முடித்துவிட்டு, 2016ம் ஆண்டு முழுவதையும் 'எந்திரன் 2' படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ரஜினி. ரஜினி இவ்வளவு நீண்ட கால்ஷீட் தருவது இதுவே முதல் முறை.

English summary
Director Shankar has been started the pre production work of Rajini's Enthiran 2.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil