»   »  ரஜினி பிறந்த நாளில் எந்திரன் 2 பட பூஜை: உறுதி செய்த லைகா

ரஜினி பிறந்த நாளில் எந்திரன் 2 பட பூஜை: உறுதி செய்த லைகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 'எந்திரன் 2' படத்தின் பூஜையை ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி எளிமையாக நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. மழையால் படபூஜை ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், டிசம்பர் 12ம் தேதி எந்திரன் 2 படத்தின் தொடக்கவிழா நடைபெறும் என பட தயாரிப்பு நிறுவனமான லைகா உறுதி செய்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கும் 'கபாலி' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன் 2' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ரஜினி. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

'கபாலி' படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் முடிந்துவிடும். அதற்குப் பிறகு ரஜினி சில நாட்கள் ஒய்வெடுக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்தே 'எந்திரன் 2' பணிகளில் தீவிரம் காட்ட இருக்கிறார்.

ரஜினி பிறந்தநாள்

ரஜினி பிறந்தநாள்

ரஜினிகாந்த் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி 'எந்திரன் 2' படத்துக்கான பூஜையை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. இதற்காக ரஜினியிடம் அனுமதி கேட்கவே அவரும் சம்மதித்திருந்தார்.

பிறந்தநாள் விழா ரத்து

பிறந்தநாள் விழா ரத்து

டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்திற்கு 65வது பிறந்தநாளாகும். இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டார் ரஜினிகாந்த்.

உறுதி செய்த லைகா

மழையால் எந்திரன்2 படத்தின் தொடக்கவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த நிலையில் ரஜினி பிறந்தநாளில் எந்திரன் 2 படத்தின் தொடக்கவிழா நடைபெறும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

ரஜினிகாந்த் எமி ஜாக்சன்

ரஜினிகாந்த் எமி ஜாக்சன்

எந்திரன் படத்தில் ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்தார். எந்திரன் 2 படத்தில் ரஜினியுடன் எமி ஜாக்சன் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lyca Production has officially confirmed that the start of the film from tomorrow, which the Superstar's birthday. Rajinikanth and Amy Jackson play the lead in the mega budget movie directed by Shankar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil