»   »  எடப்பாடி அரசை கவிழ்க்க திமுக மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே ரெடி: குஷ்பு

எடப்பாடி அரசை கவிழ்க்க திமுக மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே ரெடி: குஷ்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநில அரசை கவிழ்க்க திமுக மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே தயாராக உள்ளது.. சிறையில் உள்ள குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாபியா அரசு யாருக்கு வேண்டும்? என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க திமுக திட்டம் தீட்டுவதாக அதிகமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அரசை கவிழ்ப்பதில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தான் குறியாக உள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

திமுக

மாநில அரசை கவிழ்க்க திமுக மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே தயாராக உள்ளது.. சிறையில் உள்ள குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாபியா அரசு யாருக்கு வேண்டும்?

அடிமைகள்

அடிமைகள்

@khushsundar அடிமைகளுக்கு தான் மாபியா அரசு தேவை... துரதிர்ஷ்டவசமாக சில அரசியல் கட்சிகளும் அடிமைகள் பட்டியலில் உள்ளது என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கவலை

இந்த மாபியா அரசு மணல் கடத்தல் மூலம் நம் நிலத்தில் உள்ள மினரல்களை சுரண்டிவிடட்டு ஒன்னுமில்லாத நிலமாக்கிவிடுவார்களோ என்பது தான் என் மிகப்பெரிய கவலை.

மணல் கடத்தல்

மணல் கடத்தல்

எங்காவது மணல் கடத்தல் நடப்பதை பார்த்தால் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுமாறு என் நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். நம் நிலத்தை காப்போம், பூமியை காப்போம்.

English summary
Actress turned politician Khushbu Sundar tweeted that, 'Not only DMK, the entire TN is ready to topple the govt..who wants a mafia ruled govt tat will be controlled by convicts from a jail??'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil