»   »  'ஒரு கிடாயின் கருணை மனு!'

'ஒரு கிடாயின் கருணை மனு!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே எடுப்பார்கள் என்ற இமேஜை மாற்ற சின்ன பட்ஜெட்டில் முதல் படத்தைத் தொடங்கியிருக்கிறது ஈராஸ் நிறுவனம். அதுமட்டுமல்ல, நிறுவனத்தின் நிர்வாகத்தையும் முழுமையாக மாற்றியிருக்கிறார்கள்.

ஈராஸ் தயாரிக்கும் முதல் சிறு பட்ஜெட் படத்தின் பெயர் ஒரு கிடாயின் கருணை மனு.

Eros's Oru Kidayin Karunai Manu

விதார்த் நாயகனாக நடிக்கும் இந்தப் படம் கிராமப் பின்னணியில் உருவாக்கப்படுகிறது. அருப்புக்கோட்டையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்தப் படம் குறித்து ஈராஸ் நிறுவனத்தின் தென்னக பிரிவின் துணைத் தலைவர் சாகர் சத்வாணி கூறுகையில், "தற்போது நாங்கள் பிராந்திய மொழிகளில் மிகுந்தக் கவனம் செலுத்தி வருகிறோம். வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்து எடுத்து நிறைய திறமைகளை அறிமுகப்படுத்தி எங்கள் நிறுவனத்துக்கு என்றே ஒருத் தனிப் பெயரை ஈட்ட முடிவு செய்ததுள்ளோம்.

Eros's Oru Kidayin Karunai Manu

அந்தந்த மொழிக்கு ஏற்றவாறு, அந்த மொழியின் வட்டாரத்தை சார்ந்த கதைகளைத்தான் நாங்கள் தேடி வருகிறோம். அப்படிப்பட்ட ஒருத் தேடலில் தான் 'ஒரு கிடாயின் கருணை மனு' கதையும் எங்களுக்கு கிடைத்தது. அறிமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா இந்தக் கதையைக் கூறும் போதே நாங்கள் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டோம். தனக்கென ஒரு தனி பாணி அமைத்து வித்தியாசமான , தெளிவான கதைகளை மட்டுமே தேர்ந்து எடுத்து நடிக்கும் விதார்துக்கு இணையாக கதாநாயகியாக நடிக்கிறார் பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா.

Eros's Oru Kidayin Karunai Manu

எங்களது அடுத்தடுத்த படங்களை நாங்கள் விரைவில் அறிவிக்க உள்ளோம். ஒரு சிலப் பெரிய பட்ஜெட் படங்களும், பல சிறிய பட்ஜெட் படங்களும் இதில் அடக்கம்," என்றார்.

English summary
Eros International Media Ltd, has yet again come up with a film titled "Oru Kidayin Karunai Manu".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil