இன்னொரு கடைக்குட்டி சிங்கமா? சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் குறித்து மனம் திறந்த பாண்டிராஜ்!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10 திரையரங்குகளில் வெளியாகிறது.

Recommended Video

Etharkkum Thunindhavan Review | ET Review | Yessa ? Bussa ? | Suriya |Priyanka Arul Mohan|Pandiraj

இந்த படத்தை தியேட்டரில் வெளியிடக் கூடாது என எதிர்ப்புகள் ஒரு பக்கம் கிளம்பி உள்ள நிலையில், நடிகர் சூர்யாவுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எதற்கும் துணிந்தவன் எப்படிப்பட்ட படம் எனக் கூறியிருப்பது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

சிறப்பு காட்சி இருக்குமா

சிறப்பு காட்சி இருக்குமா

வலிமை படத்திற்கு ஒதுக்கியது போல காலை 4 மணிக்கு சிறப்பு காட்சி எதற்கும் துணிந்தவன் படத்துக்கு இல்லை எனக் கூறியதே சூர்யா ரசிகர்களை அப்செட் ஆக்கியது. இந்நிலையில், காலை 5 மணிக்கு ஒரு சில தியேட்டர்களில் மட்டும் தான் சிறப்பு காட்சி என்றும் பல திரையரங்குகளில் காலை 8 மணிக்குத் தான் முதல் காட்சி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர் புரமோஷன்

எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் தொடர்ந்து அந்த படத்துக்கு வேற லெவல் புரமோஷன்களை செய்து வருகிறது. படத்தில் நடித்த சூரி, நடிகை பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் அந்த படத்தை பற்றி பேசியுள்ள பிரத்யேக வீடியோக்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு வருகிறது.

பாண்டிராஜ் பேட்டி

பாண்டிராஜ் பேட்டி

மேலும், சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு இயக்குநர் பாண்டிராஜ் அளித்த பேட்டி ஒன்றும் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. அதில், எதற்கும் துணிந்தவன் படம் எப்படிப்பட்ட படம் என்பதை இயக்குநர் பாண்டிராஜ் ரிவீல் செய்துள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஃபேன் பாய்

ஃபேன் பாய்

சூர்யாவை எப்படி பார்க்க வேண்டும் என ஒரு ரசிகனாக விருப்பப்பட்டேனோ அப்படித் தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன் என இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ளார். தான் ஒரு சூர்யா ரசிகர்என்றும் இந்த படம் ஒரு ஃபேன் பாய் படமாகத்தான் இருக்கும் என்றும், சூர்யாவிடம் ரசிகர்கள் எதையெல்லாம் எதிர்பார்ப்பார்களோ அத்தனை விஷயங்களும் இந்த படத்தில் நிறைந்து செம ஆக்‌ஷன் பேக்ட் என்டர்டெயினராகவும் சூர்யாவுக்கே உரித்தான சோஷியல் மெசேஜும் இருக்கு என்றார்.

இன்னொரு கடைக்குட்டி சிங்கமா

இன்னொரு கடைக்குட்டி சிங்கமா

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் கடைக்குட்டி சிங்கம் படத்தை விட அதிக வசூலை ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தடைகளை தாண்டி

தடைகளை தாண்டி

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏகப்பட்ட தடைகள் கிளம்பி உள்ள நிலையில், அத்தனை தடைகளையும் சுக்கு நூறாக உடைத்து தனது படத்தின் மூலமாக சூர்யா சாதனையை படைப்பார் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X