Don't Miss!
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- News
திருப்பத்தூர் அருகே இலவச வேஷ்டி சேலைக்கான டோக்கன் வினியோகம்..நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சோகம்
- Technology
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Etharkkum Thunindhavan Box office Report Day 1: எதற்கும் துணிந்தவன் வசூல் வேட்டை நடத்தியதா?
சென்னை: சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் நேற்று (மார்ச் 10) வெளியான நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அந்த படம் பெற்றிருக்கிறது.
சில பஞ்சாயத்துக்கள் காரணமாக அதிகமான திரையரங்குகளில் எதற்கும் துணிந்தவன் வெளியாகவில்லை.
அதன் காரணமாக வியாழக்கிழமையான நேற்று படத்தின் வசூல் பெரிய அளவில் இல்லை என்றாலும், நல்ல ஓப்பனிங் என்றே பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. முதல் நாளில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை இங்கே காண்போம்..

தியேட்டர் ரிலீஸ்
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை தியேட்டர்களை தவிர்த்து ஒடிடியில் வெளியிட்டதில் இருந்தே சூர்யாவிற்கு எதிராக பல தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு குரல் தெரிவித்தனர். மேலும், சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களும் நேரடியாக ஒடிடியில் வெளியாகின. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் பல பஞ்சாயத்துக்களுக்கு பிறகு தியேட்டர்களில் வெளியானது.

வெளியிடக் கூடாது
அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஏற்படுத்திய சர்ச்சை காரணமாக இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடக் கூடாது என பெரும் எதிர்ப்புகளும் மறைமுக மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. நேற்று படம் ஓடிக் கொண்டிருந்த தியேட்டருக்கே மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் சூர்யா ரசிகர்களை கொந்தளிக்க செய்தது.

முதல் நாள் வசூல்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாடு அளவில் 9 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என முதல் வார இறுதியில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விமர்சனங்கள் பரவாயில்லை
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிரபல யூடியூப் விமர்சகர்கள் மற்றும் பல மீடியாக்களும் நல்ல விமர்சனத்தையே கொடுத்திருக்கின்றன. சூர்யா மட்டும் தான் கன்டென்ட் படங்களை நோக்கி நகர்கிறார் என சந்தோஷப்பட்டவர்கள், அவரும் மசாலாவில் இறங்கியது ஏன் என்கிற வருத்தம் மட்டுமே பெரும்பாலான விமர்சனங்களில் எதற்கும் துணிந்தவன் கதைக்கு அது வேகத்தடையாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக படத்தின் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டர்கள் கூடுது
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு நல்ல வரவேற்பு வருவதை அறிந்த தியேட்டர்கள், வலிமை படத்தின் காட்சிகளை குறைத்துக் கொண்டும், பேட்மேன் படத்தை தூக்கி எறிந்தும் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு காட்சிகளை ஒதுக்கி உள்ளன. இதன் காரணமாக முதல் வார இறுதியில் மேலும், வசூல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
Recommended Video

உலகளவில்
பான் இந்திய படமாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானாலும், பெரிதாக இந்தியில் எல்லாம் இந்த படத்தை புரமோஷன் செய்யவில்லை. ஒட்டுமொத்தமாக உலகளவில் எதற்கும் துணிந்தவன் படம் முதல் நாளில் 15 கோடிகள் வரை வசூல் ஈட்டியிருக்கும் என கணிக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.