ஆஹா...சூர்யா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து செம ட்ரீட் காத்திருக்கு

சென்னை : சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பற்றிய லேட்டஸ்ட் அறிவிப்புக்கள் ரசிகர்களுக்கு ஆச்சரியத்துடனான, சந்தோஷத்தை தந்துள்ளது. இது ரசிகர்களுக்கு நிச்சயம் அடுத்தடுத்த ட்ரீட்டாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சூர்யா நடித்த எந்த படமும் தியேட்டரில் ரிலீசாகவில்லை. 2020 ல் அவர் நடித்த சூரரைப் போற்று, 2021 ல் ஜெய்பீம் ஆகிய படங்கள் ஓடிடி.,யில் தான் வெளியிடப்பட்டன. இருந்தாலும் இந்த இரு படங்களும் சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பல பாராட்டுக்கள், விருதுகள் என அள்ளி குவித்து வருகிறது.

 தியேட்டரில் சூர்யா படம்

தியேட்டரில் சூர்யா படம்

இவற்றில் ஜெய்பீம் படம் இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நெய்டா சர்வதேச திரைப்பட விழாவிலும் ஜெய்பீம் படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகளை பெற்றது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் வெளி வர உள்ள சூர்யாவின் படம் என்பதால் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு ஆரம்பம் முதலே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

டைரக்டர் சொன்ன தகவல்

டைரக்டர் சொன்ன தகவல்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய டைரக்டர் பாண்டிராஜ், எதற்கும் துணிந்தவன் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படமாக இருந்தாலும் இதற்கு முன்பு வெளிவந்த சூர்யா படங்களை போல் இல்லாமல் கூடுதலா மாஸ் ஹீரோவாக அவரை காட்டி உள்ளோம். மாஸ் மசாலா பிரியர்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடித்ததாக இருக்கும். கடந்த சில வருடங்களாகவே சூர்யா கிளாசிக்கல் படங்களாகவே நடித்து வருகிறார். ஆனால் இது அதிக ஹீரோயிசம் நிறைந்த படமாக, வித்தியாசமான கேரக்டரை கொண்டதாக அவரின் ரசிகர்களுக்கு பிடித்ததாக அமையும் என கூறி இருந்தார்.

உறுதியாகாத ரிலீஸ் தேதி

உறுதியாகாத ரிலீஸ் தேதி

டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி 4 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக பல படங்கள் பின்வாங்கி வருவதால், சன் பிக்சர்சும் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து படத்தின் ரிலீஸ் தேதியுடனான போஸ்டரை நீக்கியது. தற்போது ரிலீஸ் தேதி இல்லாத போஸ்டரே காணப்படுகிறது.

ரிலீஸ் தேதியில்லாமல் போஸ்டர்

ரிலீஸ் தேதியில்லாமல் போஸ்டர்

இதற்கிடையில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய போஸ்டர்கள் சிலவற்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. ஆனால் ரிலீஸ் தேதி என்ன வென்று இதுவரை இறுதியாக சொல்லவில்லை. அதே சமயம் பிப்ரவரி மாதத்தில் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் சூழலை பொருத்து விரைவில் ரிலீஸ் தேதி முடிவு செய்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வெளியான புது தகவல்

வெளியான புது தகவல்

இதற்கிடையில் புதிய தகவலாக, எதற்கும் துணிந்தவன் படத்தை பிப்ரவரி மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்த கையோடு, ஏப்ரல் 14 ம் தேதி தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிபரப்பு செய்ய போகிறார்களாம். எதற்கும் துணிந்தவன் 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பை தாண்டி, தற்போது தியேட்டர், டிவி என அடுத்தடுத்து ரசிகர்களை மகிழ்விக்க போகிறார்கள் என்ற தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X