»   »  சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்… கட்டப்பா ஏன் பாகுபலியை கொல்லணும்?

சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்… கட்டப்பா ஏன் பாகுபலியை கொல்லணும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்ல கவலைப்பட எவ்ளோ விசயம் இருக்க நம்ம மக்களுக்கு கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்யணும் என்று பெரிய கவலையும், சந்தேகமும் எழுந்துள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வரும் படம் 'பாகுபலி'. ஒரு பக்கம் இப்படத்தின் வசூல் சாதனைகளை பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டாலும் மறுபக்கம் ‘கட்டப்பா' ஏன் ‘பாகுபலி'யைக் கொன்றார் என்ற ஒரே ஒரு விஷயம்தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

பலநூறு கோடி வசூல், கின்னஸ் சாதனை போஸ்டர் என ‘பாகுபலி' படம் இந்தியத் திரையுலகில் மிகப் பெரும் சாதனையை செய்துள்ளது. இந்த நிலையில் தான் இப்படி ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நான்தான் கொன்றேன்

நான்தான் கொன்றேன்

‘பாகுபலி' படத்தின் கடைசியில் அமரேந்திர பாகுபலியை நான்தான் கொலை செய்தேன் என ‘கட்டப்பா' சொல்வது போல படத்தை முடித்திருந்தார்கள். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதற்கான விடை ‘பாகுபலி' இரண்டாம் பாகத்தில்தான் தெரிய வரும். ஆனால், அதுவரை பொறுமை இல்லாத சமூக வலைத்தளவாதிகள் புதிது புதிதாக பல மீம்ஸ்களை உருவாக்கி வருகிறார்கள்.

கட்டப்பாவை ஏன் கொல்லணும்

கட்டப்பாவை ஏன் கொல்லணும்

‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்' என்பதற்குப் பொருத்தமாக டிசைன் செய்திருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக இப்படிப்பட்ட மீமீக்கள் அதிகமாகி வருகின்றன.

மோடிக்கு தெரியுமா?

இது இப்படி இருக்க பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பிரபாஸ், கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற உண்மையை சொல்லியிருப்பாரோ என்றும் கேட்டுள்ளனர்.

பாஜக ஏஜென்ட்

அதாவது பரவாயில்லை கட்டப்பாவை பாஜக ஏஜென்ட் என்றும், பாகுபலியை ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர் என்றும் கூறியதோடு ஊழலை வெளிச்சம் போட்டு காட்டியதால் பாகுபலியை கட்டப்பா கொலை செய்து விட்டார் என்றும் மீம்ஸ் போட்டு கலக்கியுள்ளனர்

யாருமே சொல்லலையேப்பா

பிரதமரை மீட் பண்ண பிரபாஸ் கூட சொல்லலையேப்பா கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தாருன்னு என்று கேட்டுள்ளனர் சிலர்.

எனக்கொரு டவுட்

டீச்சர் டீச்சர் கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்று டவுட் கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.

2016 வரை காத்திருங்க

2016 வரை காத்திருங்க

‘கட்டப்பா' கதாபாத்திரம்தான் ‘பாகுபலி' கதாபாத்திரத்திற்குப் பிறகு அதிகம் பேசப்படும் கதாபாத்திரமாக மாறியுள்ளது. ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்' என்பதைத் தெரிந்து கொள்ள 2016ம் ஆண்டு வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

இப்படி இருக்குமோ?

இப்படி இருக்குமோ?

ஒரு கதையையும் சொல்கிறார்கள். கட்டப்பாவின் மகள் தான் அனுஷ்கா, அவர் மீது பிரபாஸ், ராணா என இருவரும் காதல் கொள்கின்றனர். ஆனால், அவர் பாகுபலி மீது காதல் கொண்டு திருமணம் முடிக்கின்றாள்.

கொலை செய்யும் கட்டப்பா

இந்த திருமணத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கே உடன்பாடு இல்லையாம், இதை பயன்படுத்தி பின் நாசர், ராணா செய்யும் சதி வேலை ஒன்றால் கட்டப்பாவான சத்யாராஜே தன் கையால் பாகுபலியை கொள்கிறாராம்'.இது தான் சமூகத் தளத்தில் பரவி வரும் கதை. அது சரி இது ராஜமௌலிக்கு தெரியுமா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

அதுதான் சஸ்பென்ஸ்

அதுதான் சஸ்பென்ஸ்

கட்டப்பா தன்னுடைய பணியை சரியாக செய்திருக்கிறார். 2016 வரை பாகுபலி 2 பற்றி ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் சந்தோசப்படுகிறார் படத்தின் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி

English summary
So much so, that even social media can't stop asking the most intriguing question: Why Kattappa killed Baahubali?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil