»   »  எதிர்க்கட்சியினரையும் கூட பிரமிக்க வைத்தவர் ஜெயலலிதா: இசையமைப்பாளர் இமான்#RIPAmma

எதிர்க்கட்சியினரையும் கூட பிரமிக்க வைத்தவர் ஜெயலலிதா: இசையமைப்பாளர் இமான்#RIPAmma

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சியினரையும் கூட பிரமிக்க வைத்தவர் ஜெயலலிதா என இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார்.

Even opposition parties admire Jaya: Imman

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் ஜெயலலிதா குறித்து இசையமைப்பாளர் டி இமான் கூறுகையில்,

ஜெயலலிதாவின் திடீர் மறைவால் தமிழக மக்கள் சோகத்தில் உள்ளனர். ஒரு பெண்ணாக அவர் துணிச்சலாக செயல்பட்ட விதம் அனைவரையும் கவர்ந்துவிட்டது.

எதிர்க்கட்சியினரையும் கூட பிரமிக்க வைத்தவர் ஜெயலலிதா. ஏழை எளிய மக்களுக்காக அவர் செய்தவை பாராட்டுக்குரியது. ஏழை எளிய மக்கள் அம்மா உணவகத்தில் சாப்பிடுவதை நான் தினமும் பார்த்து ஆச்சரியப்படுவேன்.

அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என்றார்.

English summary
Music composer Imman said that even opposition parties admire Jayalalithaa.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil