ராஜுவுக்கு வாய்ப்பில்லையாம்.. பிக் பாஸ் டைட்டில் வின்னராக இவர் தான் வருவாராம்.. வருண் ஜோஷியம்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் தனது தோழி அக்‌ஷராவுடன் வெளியேறிய வருண் போகும் போது கொளுத்திப் போட்ட ஜோஷியம் சோஷியல் மீடியாவில் விவாத பொருளாக மாறியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் டைட்டிலை யார் தட்டிச் செல்ல போகிறார் என்கிற கேள்வி அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் உள்ளது.

அதிகப்படியான மக்கள் அன்பை பெற்றுள்ள ராஜுவுக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், வருண் வேறு ஒரு நபருக்கு டைட்டில் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

அக்‌ஷராவுடன் வருண்

அக்‌ஷராவுடன் வருண்

சுருதி உடன் ஜோடி போட்டு உள்ளே வந்து அக்‌ஷரா, வருண் உடன் ஜோடி போட்டு வெளியே சென்றுள்ளார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என முன்கூட்டியே அறிவிக்காத நிலையில், கடைசி நேரத்தில் அதிரடியாக கமல் வருண் மற்றும் அக்‌ஷரா எவிக்ட் என அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரொம்ப ஹேப்பி

ரொம்ப ஹேப்பி

அக்‌ஷரா மற்றும் வருண் பிக் பாஸ் வீட்டில் இருந்து எப்போடா வெளியே போவோம் என காத்துக் கொண்டிருந்த நிலையில், இருவரையும் ஒன்றாகவே அனுப்பி வைத்த நிலையில் அக்‌ஷரா மற்றும் வருண் ரொம்பவே ஹேப்பியாக மற்றவர்களுக்கு அட்வைஸ் எல்லாம் சொல்லிக் கொண்டு வெளியேறினார்கள்.

ராஜு ஜெயிக்கணும்

ராஜு ஜெயிக்கணும்

ராஜுவுக்கு ஓட்டுப் போடணுமா? உங்களுக்கு ஓட்டுப் போடணுமா? என அக்‌ஷராவிடம் கமல் கேட்க ராஜு இருந்து ஜெயிக்கட்டும் சார் என அக்‌ஷரா பெருந்தன்மையாக சொன்னார். அதே போல எவிக்ட் ஆகி வெளியே போகும் போதும், கண்டிப்பா நீ தான் ஜெயிப்ப என சொல்ல ராஜு அக்‌ஷராவின் நெற்றியில் முத்தம் கொடுத்து தங்கை பாசத்தால் உருகிய அண்ணனாக மாறினார்.

ராஜுவுக்கு வாய்ப்பில்லை

ராஜுவுக்கு வாய்ப்பில்லை

வருணும் அக்‌ஷராவும் பிக் பாஸ் வீட்டில் ஒன்றாகவே சுற்றிக் கொண்டும் ஒரே கருத்துடையவர்களாகவும் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் வருணின் ஜோஷியம் இந்த பிக் பாஸ் டைட்டிலை ராஜு ஜெயிக்க வாய்ப்பில்லை என சொல்லி சென்றது ராஜு ஆர்மிக்கு சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிபி தான் ஜெயிப்பான்

சிபி தான் ஜெயிப்பான்

மேலும், சிபி தான் இந்த பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் செல்வான் என்றும் நல்லா கேம் ஆடுற என சிபி மற்றும் ராஜு இருவருக்கும் மத்தியில் வருண் சொல்லி சென்றது ரசிகர்களை பெரிதும் குழப்பி விட்டது. பிக் பாஸ் டைட்டிலை சிபி ஜெயிக்க வாய்ப்பிருக்கா என்றும் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

சிபிக்கு கிடைக்குமா?

சிபிக்கு கிடைக்குமா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் டைட்டில் வருண் சொல்வது போல சிபிக்கு கிடைக்குமா? என்றால் மக்கள் ஓட்டுப் போடுவதன் மூலம் பிக் பாஸ் டைட்டில் வின்னரை தேர்வு செய்தால் நிச்சயம் கிடைக்காது என்றே பெருவாரியான ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். ராஜு, பிரியங்கா, பாவனி எல்லாம் சேவ் ஆன பிறகு தான் கடைசியாக சிபி சேவ் ஆகிறார். அவருக்கான ரசிகர்கள் கூட்டம் மிகவும் குறைவு என்றும் நிச்சயம் இந்த டைட்டில் சிபிக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று விவாதித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X