பாலியல் புகாரில் சிக்கிய தமிழக ‘பிக்பாஸ்’ வீட்டுக்காரர்.. மகளின் தோழிக்கு கொடுத்த டார்ச்சர்!
சென்னை: இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலமானதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு, தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றியடைந்ததால், ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாக சீசன்கள் தொடங்கப்பட்டன. தற்போது, பிக் பாஸ் ஒன்பதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஏழு சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், பணிச்சுமை காரணமாக அவர் அதில் இருந்து விலகியதை அடுத்து, எட்டாவது சீனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். தற்போது ஒளிபரப்பாகி வரும் 9வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட 2017 ஆண்டில் இருந்து தற்போது அவரை, இந்த நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் உள்ள EVP Film Cityல் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. இந்நிலையில், ஈவிபி ஃபிலிம் சிட்டியின் உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

சந்தோஷ் ரெட்டி: ஈவிபி ஃபிலிம் சிட்டியின் உரிமையாளர் சந்தோஷ் ஷெட்டி, இவரது மனைவி ஷீலா ரெட்டி ஒரு நடிகையாவார். 45 வயதாக சந்தோஷ் ரெட்டிக்கு தன்னுடைய மகள் மூலம் பெங்களூரில் வசிக்கும், ஆடை வடிவமைப்பாளருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு திருமணமாகி கணவன், இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கணவர் வெளியூரில் வேலை செய்வதால் இரண்டு குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.
நாடகமாடினார் : இந்நிலையில் சந்தோஷ ரெட்டி தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், நல்ல மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கள் என, ஆடை வடிவமைப்பாளரிடம் நட்பாக பழகி இருக்கிறார். திடீரென ஆடை வடிவமைப்பாளரின் வீட்டுக்கு வந்த சந்தோஷ் ரெட்டி, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு என் மகள் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். அப்போது, அந்த ஆடை வடிவமைப்பாளர் சந்தோஷ் ரெட்டிக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
பாலியல் தொல்லை: இந்த நேரம் சந்தோஷ் ரெட்டி, நான் உன்னை காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என கேட்டதாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆடை வடிவமைப்பாளர், எனக்கு திருமணமாகி கணவன், குழந்தைகள் இருக்கிறார்கள், இந்த எண்ணத்தோடு இங்கே வராதீர்கள் என்று அவருக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். அப்போதும் விடாத சந்தோஷ் ரெட்டி, ஆடை வடிவமைப்பாளரிடம், என்னை காதலிக்கவில்லை என்றால் நீயும், உன்னுடைய குழந்தைகளும் உயிரோடு இருக்க மாட்டீர்கள் உங்களை கொன்று விடுவேன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
போலீசில் புகார்: இதையடுத்து ஆடை வடிவமைப்பாளர் பெங்களூரு காவல் நிலையத்தில் சந்தோஷ் ரெட்டி மீது புகார் அளித்து இருக்கிறார். இது குறித்து பெங்களுர் போலீசார் விசாரணை நடத்திய, சந்தோஷ் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு சந்தோஷ ரெட்டி நள்ளிரவில் போதையில் குடித்துவிட்டு, அதிவேகமாக சென்று போலீசார் வைத்திருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











