Just In
- 14 min ago
காந்தி டாக்ஸ்..கமல் படத்துக்குப் பிறகு இதுதான்..பாலிவுட்டில் உருவாகும் மவுனப் படத்தில் விஜய் சேதுபதி
- 2 hrs ago
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- 3 hrs ago
பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தவங்க என்ன சொன்னாங்க? கமலிடம் போட்டுடைத்த ஹவுஸ்மேட்ஸ்!
- 8 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
Don't Miss!
- News
விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்ய போகிறதா சென்னை போலீஸ்.. பரபர தகவல்
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஜய் படத்துக்கும் இப்படிதான் நடந்துச்சு.. தொடர்ந்து அப்பாவி உயிர்களை காவு வாங்கும் ஈவிபி!
சென்னை: ஈவிபி பிலிம் சிட்டியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் தொடரும் உயிர் பலிகள் திரைத்துறையினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறது.
இதில் கமலுக்கு ஜோடியாக நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் பிரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதேபோல் நடிகர் சித்தார்த்தும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

மூன்று பேர் பலி
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு காட்சியாக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு இங்கு கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பூங்காவாக இருந்தபோது
ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெறும் ஷுட்டிங்கில் உயிரிழப்பு ஏற்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இந்த பிலிம் சிட்டி பொழுது போக்கு பூங்காவாக இருந்தபோதோ ரத்தக்காவையும் உயிர் பலிகளையும் கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து தான் பிலிம் சிட்டியாக மாற்றப்பட்டது.

பிக்பாஸ் முதல் சீசன்
இதனை தொடர்ந்து அங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள் ஷுட் செய்யப்பட்டு வருகின்றது. பிக்பாஸ் முதல் சீசனின் போது அதில் பணியாற்றிய ஊழியர் சலீம் முகமது ஷேக் என்பவர் மர்மமான முறையில் பலியானார். மும்பையைச் சேர்ந்தவர் அவர் அங்கு பிளம்பராக வேலை பார்த்து வந்தார். வலிப்பு நோயால் அவர் மரணமடைந்ததாக கூறப்பட்டது.

ஏசி மெக்கானிக்
இதனை தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கான செட் அமைக்கப்பட்டது. அப்போது ஏசி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏசி மெக்கானிக் குணசேகரன் என்பவர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். அவரை மீட்டு சக ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வடமாநில இளைஞர்
ரஜினிகாந்த் நடித்த காலா படப்பிடிப்பின் போதும் ஒருவர் உயிரிழந்தார். காலா படத்திற்கான செட் அமைத்த போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எலெக்ட்ரீஷியன் செல்வராஜ்
அதனை தொடர்ந்து விஜயின் பிகில் படத்தின் படப்பிடிப்பு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் கடந்த ஆண்டு நடைபெற்றது. கிரேனில் தொங்கிக் கொண்டிருந்த ஃபோகஸ் லைட் அறுந்து விழுந்து எலக்ட்ரீஷியன் செல்வராஜ் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார்.

அச்சம் அதிர்ச்சி
இந்நிலையில் பிகில் படத்தின் போது விபத்து நடந்த அதே இடத்தில் தான் தற்போது இந்தியன் 2 படத்தின் விபத்தும் நடந்துள்ளது. இதனை அறிந்த நெட்டிசன்கள் தொடர்ந்து காவு வாங்கும் ஈவிபி பிலிம் சிட்டியில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஈவிபியில் நடைபெறும் ஷுட்டிங்கில் தொடர்ந்து உயிர் பலி ஏற்படுவது திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.