twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது என்ன தர்பாருக்கு வந்த சோதனை.. ரஜினிகாந்த், முருகதாஸ் மீது முன்னாள் ராணுவ வீரர் வழக்கு!

    |

    சென்னை: தர்பார் படத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் மீது முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ரிலீஸானது. இந்தப் படத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார்.

    நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் உயர் அதிகாரியாக இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். தர்பார் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்த போதும் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் திணறி வருகின்றனர்.

    முன்னாள் வீரர் வழக்கு

    முன்னாள் வீரர் வழக்கு

    இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் மீது முன்னாள் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தூத்துகுடி நீதிமன்றத்தில்

    தூத்துகுடி நீதிமன்றத்தில்

    தூத்துக்குடியை சேர்ந்த மரிய மைக்கேல் என்பவர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறையை தரக்குறைவாக சித்தரிப்பதாக அம்மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    ஹிப்பி தலை

    ஹிப்பி தலை

    இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தர்பார் படத்தில் சீருடை பணியாளர்களை புண்படுத்தும் விதமாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினிகாந்த் ஹிப்பி தலை மற்றும் தாடியுடன் நடித்திருப்பதாக கூறியுள்ளார்.

    வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

    வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

    மேலும் நான் கமிஷனர் அல்ல ரவுடி என்று பேசும் வசனம், போலீஸ் மற்றும் ராணுவத்தினரை கொச்சைபடுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்தப் படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    சசிகலாவின் ஷாப்பிங்

    சசிகலாவின் ஷாப்பிங்

    தர்பார் படம் ரிலீஸ் ஆனது முதல் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. சசிகலாவின் ஜெயில் ஷாப்பிங் குறித்த வசனத்தால் அவரது வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.

    லைக்கா அறிவிப்பு

    லைக்கா அறிவிப்பு

    இதனை தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள அந்த சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்படும் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவித்தது. இந்நிலையில் அவதூறு வழக்கு பதிவு செய்யகோரி தொடரப்பட்டுள்ளது.

    English summary
    Ex military man has filed case against Darbar movie. He filed case on Rajinikanth, AR Murugadas and Subashkaran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X