பார்வதி நாயர் என் மீது திருட்டுப் பழி சுமத்திட்டாங்க..சுபாஷ் புகார்!
சென்னை: அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை பார்வதி நாயர்.
மலையாளத்தில் ஆங்கிரி பேபிஸ் இன் லவ் படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர். கமல்ஹாசனின் உத்தம வில்லன், உதயநிதி ஸ்டாலின் உடன் நிமிர், பார்த்திபனின் சீதக்காதி, 83 உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் தனது வீட்டில் இருந்து நகைகளை ஊழியர் சுபாஸ் சந்திர போஸ் திருடிவிட்டதாக பரபரப்பு புகார் அளித்திருந்தார். இந்நிலையில், தன் மீது வேண்டுமென்றே திருட்டுப் பழியை பார்வதி நாயர் சுமத்த இதுதான் காரணம் என புதிய புகார் ஒன்றை பார்வதி நாயர் மீது தொடுத்துள்ளார் முன்னாள் ஊழியர் சுபாஷ் சந்திர போஸ்.

மலையாளம் டு தமிழ்
மலையாளத்தில் 2014ம் ஆண்டு அறிமுகமான பார்வதி நாயர் 2015ம் ஆண்டு தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார். ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், விரைவில் வெளியாக உள்ள ஆலம்பனா படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் அழகி
இன்ஸ்டாகிராமில் யாஷிகா ஆனந்த், ஷிவானி நாராயணன், தர்ஷா குப்தா உள்ளிட்ட நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தொடர்ந்து ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை போட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை பார்வதி நாயர். இந்நிலையில், திடீரென அவர் போலீஸில் கொடுத்த புகார் பரபரப்பை கிளப்பியது.

ஊழியர் மீது திருட்டுப் பட்டம்
பார்வதி நாயர் வீட்டில் வேலை பார்த்து வந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பார்வதி நாயர் சில நாட்களுக்கு முன்னர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ரூ9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கைக்கடிகாரங்கள், ரூ1.5 லட்சம் மதிப்பிலான ஐபோன், ரூ2 லட்சம் மதிப்பிலான லேப்டாப் ஆகியவை திருடு போய்விட்டது. வீட்டில் பணிபுரிந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ்தான் இதை திருடிவிட்டார் என பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார்.

சுபாஷ் கொடுத்த புகார்
பார்வதி நாயர் புகார் கொடுத்த நிலையில், ஊழியர் சுபாஷ் தற்போது நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மேலும், பரபரப்பை கிளப்பி உள்ளது. பார்வதி நாயர் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், எதிர்த்து பேசினால், பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிப்பேன் என மிரட்டியதாகவும், தான் எதையும் திருடவில்லை என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

ஆண் நண்பர்களுடன் கூத்து
இப்படியொரு பொய் புகாரை தன் மீது அவர் சுமத்த காரணமே, இரவு நேரத்தில் ஆண் நண்பர்களுடன் அப்படியொரு கோலத்தில் அவர் பார்ட்டி செய்ததை பார்த்து விட்டேன். இதுபற்றி வெளியே நான் சொல்லி விடுவேன் என நினைத்துத் தான் என் மீது திருட்டுப் பழி சுமத்தினார் எனக் கூறியுள்ளார். ஆனால், இதில், சுபாஷ் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து போலீஸார் விசாரிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











