அதே தான்.. அப்படியே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க.. விக்ரமை விட அஜய் ஞானமுத்து கண்ணை பாருங்க!

சென்னை: சியான் விக்ரமின் கோப்ரா படத்தின் மேக்கிங் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீனிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு முடியாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ரிஸ்க்

அடுத்த ரிஸ்க்

ரிஸ்க் என்றாலே சியான் விக்ரமுக்கு ரஸ்க் சாப்பிடுவது போலத்தான். சாமுராய், அந்நியன், ஐ என ஒவ்வொரு படத்திலும் தனது உடம்பை மூலதனமாக போட்டு ஒரே படத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நடித்து வரும் விக்ரம் கோப்ரா படத்தில் 7 விதமான கெட்டப்புகளில் மாறி நடித்துள்ளார்.

கேஜிஎஃப் நாயகி

கேஜிஎஃப் நாயகி

கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமான கன்னட நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி தான் கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள தும்பி துள்ளல் பாடல் லிரிக் வீடியோ மற்றும் கோப்ரா டீசரில் அவரது அழகு ரசிகர்களை அப்படியே ஈர்த்துள்ளது.

எக்ஸ்க்ளூசிவ் போட்டோ

எக்ஸ்க்ளூசிவ் போட்டோ

2020ம் ஆண்டு மே மாதமே கோப்ரா வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் பாதிப்பு அந்த படத்தின் ரிலீசையும் மற்ற பெரிய படங்களின் ரிலீசை போல தள்ளிப் போட வைத்துள்ளது. இந்நிலையில், கோப்ரா படத்தின் எக்ஸ்க்ளூசிவ் மேக்கிங் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

Chiyaan Vikram கொரோனா நிவாரண நிதியாக 30 லட்சம் வழங்கியுள்ளார் | MK Stalin, AIADMK
அந்த கண்ண பாருங்க

அந்த கண்ண பாருங்க

7 விதமான கெட்டப்புகளில் இந்த படத்தில் விக்ரம் நடித்துள்ள நிலையில், அவர் மேக்கப் ரூமில் இருக்கும் போது பின்னாடி இருந்து கொண்டு அஜய் ஞானமுத்து கொடுக்கும் ரியாக்‌ஷன் தான் இந்த போட்டோவின் சிறப்பம்சமாகவே உள்ளது. விக்ரமின் டெடிகேஷனையும் தாண்டி அஜய்யின் அந்த கண்ணை பார்த்த ரசிகர்கள் அவரது வெறித்தனத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

எப்போ ரிலீசாகும்

எப்போ ரிலீசாகும்

சியான் விக்ரம் நடிப்பில் மிரட்டலான கோப்ரா படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் அப்போதிலிருந்தே இந்த படம் எப்போது ரிலீசாகும் என்கிற கேள்விகளை இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் எழுப்பி வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்காவது படம் வெளியாகுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X