»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ள 17 படங்களுக்கு தலா ரூ 5 லட்சம் மானியம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதி பக்தவச்சலம் தலைமையில் 8 பேர் கொண்ட தேர்வுக் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழுவிடம், கடந்த 99ம் வருடம் வெளிவந்த குறைந்த பட்ஜெட் படங்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டது.

இதன்படி தேர்வுக்குழுவினர் அரசுக்கு அளித்த பரிந்துரை:

99 ம் வருடம் 85 தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்தன. மானியத் தொகை கோரி 26 படங்கள் விண்ணப்பம் செய்திருந்தன. இவற்றில் 17 படங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட படங்களில் சில: அண்ணன், பூவெல்லாம் கேட்டுப்பார், புதுக்குடித்தனம், மறவாதே கண்மணியே, உன்னருகே நானிருந்தால், கண்ணோடுகாண்பதெல்லாம், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, முகம், மனம் விரும்புதே உன்னை உள்பட 17 படங்கள்.

இந்தப் படங்களுக்கு ரூ 5 லட்ச ரூபாய் மானியம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

Read more about: allowance, budjet, chennai, movies, tamilnadu
Please Wait while comments are loading...