»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் திரைப்படத் தயாரிப்புச் செலவை 40 சதவீதம் குறைக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

சென்னை காஸ்மோ பாலிட்டன் கிளப்பில், திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சென்னை, செங்கை, திருவள்ளூர், மாவட்டவிநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே.ராஜன் தலைமை தாங்கினார். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவரம் வருமாறு:

விநியோகஸ்தர் சங்கங்களின் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு, திரைப்படங்களை வாங்கி விநியோகம் செய்யும் உரிமை உண்டு.

தமிழ் திரைப்பட வளர்ச்சியைக் கருதி, தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தயாரிப்புச் செலவை 40 சதவீதம் குறைக்க வேண்டும் என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil