»   »  'டோணி' படம், என்ன கஷ்டம், என்ன கஷ்டம்: விஎப்எக்ஸ் நிபுணர்கள்

'டோணி' படம், என்ன கஷ்டம், என்ன கஷ்டம்: விஎப்எக்ஸ் நிபுணர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கியமான சில கிரிக்கெட் போட்டிகளுக்கு விஷுவல் எபெக்ட்ஸ் செய்ய மிகவும் கடினமாக இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி 60 நாடுகளில் ரிலீஸாகி பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது.

படத்தின் விஷுவல் எபெக்ட்ஸை பிரைம் ஃபோகஸ் நிறுவனம் செய்துள்ளது. இது குறித்து நிறுவன துணை தலைவர் நீரஜ் சங்காய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

டோணி

டோணி

டோணி படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அதனால் நிஜத்தில் நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே திரையில் கொண்டு வர பெரும் முயற்சி செய்துள்ளோம்.

விஷுவல் எபெக்ட்ஸ்

விஷுவல் எபெக்ட்ஸ்

இந்திய கிரிக்கெட் அணிக்காக டோணி விளையாடிய சில முக்கிய காட்சிகளின் விஷுவல் எபெக்ட்ஸ் தான் எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. டோணியின் இடத்தில் சுஷாந்தின் முகத்தை பொருத்த படாதபாடு பட்டோம்.

பெருமை

பெருமை

சில முக்கிய கிரிக்கெட் போட்டிகளில் டோணியின் முகத்தில் சுஷாந்தின் உருவத்தை கஷ்டப்பட்டு வைத்தாலும் அது திரையில் அருமையாக வந்திருப்பதை பார்த்து பெருமையாக உள்ளது. எங்கள் பணியை நினைத்து பெருமையாக உள்ளது.

ஹாலிவுட்

ஹாலிவுட்

டோணி படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள விஷுவல் எபெக்ட்ஸ் டெக்னிக்குகள் ஹாலிவுட் படமான கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சரில் பயன்படுத்தப்பட்டவை.

English summary
The experts who worked on M.S. Dhoni: The Untold Story, based on Mahendra Singh Dhoni, say that it was difficult to recreate the footage where the India’s star skipper played in milestone matches.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil