twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனச்சாட்சியற்ற இளைஞரின் செயல்..சிகிச்சையில் இருக்கும் போண்டாமணியை ஏமாற்றி ரூ.1.09 லட்சம் அபகரிப்பு

    |

    சிகிச்சையில் இருக்கும் போண்டாமணியை மனசாட்சியற்ற முறையில் ஏமாற்றி ஏடிஎம் கார்டு மூலம் 1.09 லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கிய மோசடி நபர் சிக்கினார்.

    உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவருக்காக நல்ல உள்ளங்கள் அளித்த உதவியை தொகையை திருடிய இளைஞர் கம்பி எண்ணுகிறார்.

    வங்கியின் குறுஞ்செய்தி வந்ததை பார்த்ததால் பணத்தை அபேஸ் செய்த இளைஞர் மீது புகார் அளித்து பிடித்து கொடுத்துள்ளார், போண்டா மணியின் மனைவி.

    சிகிச்சைக்கு உதவ வேண்டும்... முன்னணி நடிகர்களிடம் மீண்டும் கோரிக்கை வைத்த போண்டா மணி சிகிச்சைக்கு உதவ வேண்டும்... முன்னணி நடிகர்களிடம் மீண்டும் கோரிக்கை வைத்த போண்டா மணி

    போண்டாமணியின் துயர வாழ்க்கை

    போண்டாமணியின் துயர வாழ்க்கை

    நகைச்சுவை நடிகர் போண்டாமணி தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக வடிவேலு நடித்த படங்களில் அவருடன் நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமானவர் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் மருத்துவமனையில் பரிசோதித்ததில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தது தெரியவந்தது. சிறுநீரக பிரச்சனைக்காக இவர் கடந்த மாதம் அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற போண்டாமணி

    தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற போண்டாமணி

    தனக்கு உதவி செய்யும்படி சமூக வலைதளங்களிலும், ஊடகங்கள் வாயிலாகவும் போண்டாமணி கோரிக்கை வைத்திருந்தார். இவருக்கு உதவி செய்யும்படி பலரும் கோரிக்கையை வைத்திருந்த நிலையில் திரையுலகை சேர்ந்தவர்கள், பொது அமைப்பினர் இவருக்கு உதவி செய்தனர். தமிழக அரசும், தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா சுப்ரமணியனும் நேரில் சென்று பார்த்து உரிய சிகிச்சை அளிப்பதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இவரது சிகிச்சைக்காக சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்படி சிகிச்சை பெற்று வரும் பொழுது அதே மருத்துவமனையில் இவருக்கு திருப்பூர் சேர்ந்த ராஜேஷ் என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார்.

    உதவி செய்து நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட இளைஞர்

    உதவி செய்து நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட இளைஞர்

    போண்டாமணியை கனிவுடன் பார்த்துக் கொள்வது, அவரது பிரச்சினைகளை கேட்பது, தேவைகளை அறிந்து சிறு சிறு உதவிகள் செய்வது என போண்டாமணி உடன் நெருக்கமாகியுள்ளார் ராஜேஷ். உடல் நலன் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தன்னால் செயல்பட முடியாத நிலையில் இருந்த போண்டா மணி, இளைஞர் ராஜேஷின் உதவியால் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்து பழகியுள்ளார். ராஜேஷை போண்டாமணி பெரிதும் நம்பியுள்ளார். அவரது குடும்பத்தில் ஒருவர் போல் அனைவருடனும் சகஜமாக பழகியுள்ளார் ராஜேஷ்.

    நண்பர் போல் பழகி மோசடி செய்த இளைஞர்

    நண்பர் போல் பழகி மோசடி செய்த இளைஞர்

    பின்னர் போண்டாமணி சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றுள்ளார். போண்டாமணிக்கு உதவி செய்த இளைஞர் ராஜேஷ் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு செல்வதற்கும், வீட்டுக்கு போன பின்னரும் அவருக்கு வேண்டிய சின்ன உதவிகளையும் செய்து வந்துள்ளார். ராஜேஷ் உதவி செய்வதை கண்டு அவரது குடும்பம் அவரை நன்றியுடன் பார்த்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனக்கு சில மருந்துகள் வாங்க வேண்டும் என்பதற்காக ராஜேஷின் உதவியை போண்டா மணி நாடி உள்ளார். நான் வாங்கி தருகிறேன் என்று மருத்துவரின் பிரிஸ்க்ரிப்ஷனையும், ஏடிஎம் கார்டையும் வாங்கிக்கொண்டு, பின் நம்பரையும் கேட்டு வாங்கி சென்றுள்ளார்.

    உதவி செய்வதுபோல் பழகி 1 லட்த்து 9 ஆயிரம் அபேஸ்

    உதவி செய்வதுபோல் பழகி 1 லட்த்து 9 ஆயிரம் அபேஸ்

    ராஜேஷ் சென்று ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று ஆகியும் வரவில்லை. சில மணி நேரம் பொறுத்துப் பார்த்த போண்டா மணியின் மனைவி ராஜேஷின் போன் நம்பருக்கு போன் செய்தபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஏதாவது காரணம் இருக்கும் என்று சமாதானமான அவர்கள் பல மணி நேரமாகியும் ராஜேஷை தொடர்பு கொள்ள முடியாததாலும், அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாலும் சந்தேகம் அடைந்து போலீசுக்கு போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது போண்டாமணியின் செல்போனுக்கு நகைக்கடை ஒன்றில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு நகை வாங்கியதாக வங்கியின் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போண்டாமணியின் மனைவி இதுபற்றி எஸ்.ஆர்.எம்.சி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

    மோசடி செய்த நபர் சிக்கினார்

    மோசடி செய்த நபர் சிக்கினார்

    மோசடியாக பழகி நண்பன் போல் பழகி நம்பிக்கையை பெற்று போண்டாமணிக்கு உதவி செய்தவர்கள் பணம் அவரது வங்கி கணக்கில் இருக்கும் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு போண்டா மணியுடன் பழகி அந்த பணத்தை அபேஸ் செய்ய நினைத்த ராஜேஷ், போண்டா மணியின் நம்பிக்கையை பெற்று வங்கி ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு பணத்தை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் கோயம்புத்தூரை சேர்ந்த ராஜேஷ் பிரதீப் என்பவரை என்பவர்தான் போண்டா மணியை ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்தது தெரிய வந்தது. இதை எடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    மனசாட்சியற்ற முறையில் திருடிய நபர்

    மனசாட்சியற்ற முறையில் திருடிய நபர்

    விசாரணையில் ராஜேஷ் என்பவர் ராஜேஷ் பிரதீப் என்று பல பெயர்களை வைத்துக்கொண்டு இதுவரை பலரும் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இது போன்று அவர் ஏமாற்றியதாக நான்கு வழக்குகளும் அவர் மீது உள்ளது தெரியவந்தது. வங்கியின் குறுஞ்செய்தி ராஜேஷை சிக்க வைத்துள்ளது. தக்க நேரத்தில் போண்டாமணியின் குடும்பத்தார் போலீசுக்கு சென்றதால் மோசடி பேர்வழி ராஜேஷ் கைது செய்யப்பட்டு அவர் வாங்கிய நகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் ஒரு நபர் தனக்கு பண வசதி இல்லாத காரணத்தால் பலரிடமும் உதவி கேட்டு அதில் சிலர் உதவி அளித்து உதவி அளித்த பணத்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதை மனசாட்சியாற்ற முறையில் மோசடி செய்யும் எண்ணத்துடன் பழகி திருடும் ராஜேஷ் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இழவு வீட்டில் கிடைத்த வரை லாபம் என்பது போல் செயல்பட்ட ராஜேஷ் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

    English summary
    A fraudster who cheated Bondamani, who is undergoing treatment, bought jewellery worth Rs 1.09 lakh through an ATM card was caught. A young man stole the amount of charity he gave to a sick person undergoing treatment. Bonda Mani's wife filed a complaint against the youth who stole the money after seeing the text message from the bank.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X