»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை மீனா கண்தானம் செய்தார்.அதற்கான உறுதிமொழிபத்திரத்திலும் கையெழுத்திட்டார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் ஏற்கனவேகண்தானம் செய்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இப்போது நடிகை மீனாவும்கண்தானம் செய்துள்ளார்.

சென்னையில் உள்ள சங்கரநேத்ராயாலாவில் கண் சேமிப்பு வங்கி உள்ளது அங்கு கண்தானம் செய்வதற்கான உறுதி மொழி பத்திரத்திலும் திங்கள்கிழமையன்றுகையெழுத்திட்டுக் கொடுத்தார்.

கண்தானம் செய்தது பற்றி மீனா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில்:

நான் பல உதவிகளை பலருக்கு செய்திருக்கிறேன். இதுவரை நான் அதை வெளியில்சொன்னதில்லை. இனிமேலும் சொல்லமாட்டேன்.

தானத்தில் சிறந்தது கண்தானம். அது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதால் தான்இதை தெரிவித்துள்ளேன்.

நான் கண்தானம் செய்ய வேண்டும் என் பல காலமாகவே நினைத்து வந்தேன். என் பிறந்தநாளன்று கண்தானம் செய்யலாம் என முடிவு செய்தேன்.

என் பிறந்த நாளான கடந்த 16-ம் தேதி லண்டனில் இருந்தேன், அதனால் அங்கிருந்துதிரும்பியவுடன் கண்தானம் செய்துள்ளேன். நாம் இறந்தபின்பும் வாழ்வது நம்கண்கள்தான். நம் கண்ணால் இன்னொருவர் மூலமாம இந்த உலகைப் பார்க்கலாம்.

என் கண்கள் மிகவும் அழகானவை என பலரும் சொல்கிறார்கள்.அந்த அழகான கண்களைதானம் செய்வதில் பெருமை அடைகிறேன். அதன் மூலம் ஒருவருக்கு பார்வை கிடைப்பதுகுறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

எல்லோரும் கண்தானம் செய்ய வேண்டும் என்பது எண் எண்ணம். என்னோடு என் தந்தைதுரைராஜும் கண்தானம் செய்துள்ளார் என்றார் அவர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil