ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இயக்குனரின் படத்தில் நடிக்க மறுத்த ஃபகத் பாசில்.. காரணம் என்ன?
சென்னை: 'பேர்ட்மேன்', 'தி ரெவனன்ட்' போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களை இயக்கிய அலெஹான்ட்ரோ இனாரிட்டு இயக்க இருக்கும் படத்தில் நடிக்க மறுத்தது குறித்து மலையாள நடிகர் பாகத் பாசில் விளக்கம் அளித்துள்ளார்.
பகத் பாசில், வடிவேலுவுடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பகத் பாசிலின் நடிப்பை அனைவரும் வியந்து பாராட்டினார்கள். அண்மையில் வடிவேலுவுடன் இணைந்து மீண்டும் மாரீசன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி வெளியானது. மாமன்னன் திரைப்படத்தில், பயங்கர சாதி வெறி பிடித்த வில்லனாக நடித்திருந்த பகத் பாசில், இந்த படத்தில் துருதுருவென திரியும் திருடனாக நடித்திருந்தார். முன்னர் காமெடி கதாப்பாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த வடிவேலு, இப்போது முழு நேரமாக குணச்சித்திர ரோல்களில் மட்டும் நடித்து அசத்தி இருந்தார். இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆகஸ்ட் 22ந் தேதி வெளியாக உள்ளது.

பகத் பாசில்: தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் மாஸ் காட்டி வரும் பகத் பாசில் நடிப்பில், 'Oduṁ Kuthira Chadum Kuthira', என்ற படத்தில் நடித்துள்ளார். அல்தாஃப் சலீம் இயக்கி இருக்கும் இப்படத்தில் கல்யாண பிரியதர்ஷினி முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 29ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலையில் பகத் பாசில் ஈடுபட்டுள்ளார். 'Oduṁ Kuthira Chadum Kuthira' படம் குறித்து கியூ ஸ்டுடியோவுக்கு அளித்த பேட்டியில் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளா. அப்போது அவர், ஆஸ்கர் விருதை பெற்ற இயக்குநரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்ததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.
உச்சரிப்பு பிடிக்கவில்லை: தனது உச்சரிப்பு சரியாக இல்லாததே அந்த படத்தில் இருந்து விலகியதற்கு காரணம் என்ன என்று ஃபகத் கூறினார். "என் உச்சரிப்பு அவருக்குப் பிடிக்கவில்லை. அதைச் சரிசெய்ய, நான் சுமார் நான்கு மாதங்கள் அமெரிக்காவில் தங்க வேண்டும் என்று அவர் சொன்னார். அந்த நான்கு மாதங்களுக்கு எனக்கு எந்தவித ஊதியமும் இருக்காது என்றும் அவர் கூறினார். அதனால்தான் நான் அந்த வாய்ப்பைக் கைவிட்டேன். பெரும்பாலான நடிகர்கள் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால், அதை தக்கவைத்துக்கொள்ள போராடுவார்கள், கைப்பற்றத் துடித்திருப்பார்கள். ஆனால், தனது உச்சரிப்பை மாற்றிக்கொள்வதற்காக இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்ற உத்வேகம் தனக்கு வரவில்லை.
தவறான முடிவு: இதனால், கிடைக்காத வாய்ப்பைப் பற்றி வருத்தப்படாமல், மலையாள சினிமா தனக்கு அளித்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன். என் வாழ்க்கையில் நடந்த அனைத்து மாயங்களும் இங்கேயேதான் நிகழ்ந்தன. ஏதேனும் மாற்றம் நிகழ வேண்டும் என்றால், அது இங்கேயேதான் நிகழ வேண்டும். அந்த மாற்றத்திற்காக நான் கேரளாவுக்கு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறினார். ஃபகத் ஃபாசிலின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. பகத் பாசிலின் இந்த முடிவை ஒரு சிலர் பாராட்டினாலும், மறுபுறம் விவாதங்களை கிளப்பி உள்ளது. 'தி ரெவனன்ட்' படத்தின் இயக்குநருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஃபகத் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











